ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவரை விடுவிக்க கோரி போராட்டம்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவரை விடுவிக்க கோரி இன்று முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

Local residents of Munirka area protest outside the gates of the JNU, against a function that was allegedly anti national in nature praising Afzal Guru on campus, in the capital New Delhi on friday. Delhi Police security was provided at the entrance to the JNU during the protest. Express Photo by Tashi Tobgyal New Delhi 120216

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் இந்திய அரசுக்கு எதிராகவும் அப்சல் குருவிற்கு ஆதரவாகவும் கோசங்களை எழுப்பியதாக கூறி மாணவர் சங்க தலைவர் கன்ஹயா குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ், இடது சாரி உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் இன்று முதல் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர். மாணவர் சங்கத் தலைவர் கன்ஹயா குமாரை விடுதலை செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அஃப்சல் குருவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்ட சம்பவம், பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீது ஆதரவுடன் நடைபெற்றதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Scroll To Top