Tag Archives: முதல்-அமைச்சர்

மு.க.ஸ்டாலின் அறிக்கை; முதல்–அமைச்சர், அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயங்குவது ஏன்?

மு.க.ஸ்டாலின் அறிக்கை; முதல்–அமைச்சர், அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயங்குவது ஏன்?

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது   முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயங்குவது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.   தேர்தல் ஆணையத்தின் உத்தரவினை ஏற்று முதல்–அமைச்சர் மீதும், அமைச்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய காவல்துறை இவ்வளவு தயங்குவது ஏன்? வழக்குப்பதிவு செய்வதற்கு தடையாக ...

மேலும் படிக்க »

போயஸ் கார்டனில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆலோசனை

போயஸ் கார்டனில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆலோசனை

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எண்ணூர் கடலில் எண்ணெய் படலம் அகற்றும் பணியை பார்வையிட்டதும் நேராக கோட்டைக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் திடீரென்று காலை 11.45 மணிக்கு போயஸ் கார்டன் சென்றார். அங்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி பழனிச்சாமி, ...

மேலும் படிக்க »

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை 18-வது நாளாக தொடர்ந்து கண்காணிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை 18-வது நாளாக தொடர்ந்து கண்காணிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர், டாக்டர் சிவகுமார் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் ஆகியோர் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவுடன் இணைந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். டாக்டர்களின் தொடர் ...

மேலும் படிக்க »

முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் ஜெயலலிதா வைக்கப்பட்டுள்ளார்.  ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினர் ...

மேலும் படிக்க »

புதுவையில் 29-ந்தேதி நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்

புதுவையில் 29-ந்தேதி நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்

புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 24-ந்தேதி (புதன்கிழமை) கவர்னர் கிரண்பேடி உரையுடன் தொடங்கியது. வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் பங்கேற்று பேசினர். பின்னர் இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, ...

மேலும் படிக்க »

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது; கர்நாடகா

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது; கர்நாடகா

தமிழகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கடந்த 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1991-ம் ஆண்டு இடைக்கால ஆணையை அளித்த நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு இறுதி ஆணை பிறப்பித்தது. அதன்படி தமிழகத்துக்கு ஒவ்வொரு பாசன ஆண்டும் (ஜூன் முதல் மே வரை) 192 ...

மேலும் படிக்க »

பி.வி.சிந்து-சாக்சி மாலிக் இருவரும் இளம்பெண்களுக்கு முன்மாதிரி: தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

பி.வி.சிந்து-சாக்சி மாலிக் இருவரும் இளம்பெண்களுக்கு முன்மாதிரி: தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாக்சி மாலிக் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து, சாக்சி மாலிக் ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் வாழ்த்துக்களை ...

மேலும் படிக்க »

16 ஆண்டுகளுக்கு பிறகு இரோம் சர்மிளாவை சந்தித்தார் அவரது தாயார்

16 ஆண்டுகளுக்கு பிறகு இரோம் சர்மிளாவை சந்தித்தார் அவரது தாயார்

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக்கோரி மணிப்பூரில் 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்த இரோம் சர்மிளா 9-ம் தேதி உண்ணாவிரதத்தை முடித்ததை தொடர்ந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மாநில மக்கள் உரிமையை நிலைநாட்ட முதல்–அமைச்சர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்தார். இரோம் சர்மிளாவின் இந்த அறிவிப்புக்கு மாநிலத்திற்கு வெளியே பெரும் ஆதரவு கிடைத்தாலும், ...

மேலும் படிக்க »

மானாவாரி நில விவசாயத்திற்கு புதிய திட்டம்; கூட்டுறவுக்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.1,680.73 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் அறிவிப்பு

மானாவாரி நில விவசாயத்திற்கு புதிய திட்டம்; கூட்டுறவுக்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.1,680.73 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் அறிவிப்பு

மானாவாரி நில விவசாயத்திற்கு புதிய திட்டம் உருவாக்கப்படும் என்றும், கூட்டுறவுக்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.1,680.73 கோடி ஒதுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:- 2016-2017-ம் ஆண்டில், 27.50 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் திருந்திய நெல் சாகுபடி முறையும் 43,688 ஏக்கர் நிலப்பரப்பில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையும் விரிவாக்கம் செய்யப்படும். பருத்தி மற்றும் ...

மேலும் படிக்க »

விவசாயிகளுக்கு தென்னை மர காப்பீட்டு திட்டம் தொடரும்; பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும்; ஜெயலலிதா உத்தரவு

விவசாயிகளுக்கு தென்னை மர காப்பீட்டு திட்டம் தொடரும்; பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும்; ஜெயலலிதா உத்தரவு

விவசாயிகளுக்கு தென்னை மர காப்பீட்டு திட்டம் தொடரும் என்றும், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த உத்தரவிட்டு இருப்பதாகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விவசாயக் கடன் பெற்ற விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் எங்களது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கூட்டுறவு ...

மேலும் படிக்க »
Scroll To Top