Tag Archives: மருத்துவமனை

கொரோனா ஒழிப்பு மருத்துவமனையிலிருந்து துவங்கவேண்டும்; போலீஸின் தீவிர கண்காணிப்பில் அல்ல!

கொரோனா ஒழிப்பு மருத்துவமனையிலிருந்து துவங்கவேண்டும்; போலீஸின் தீவிர கண்காணிப்பில் அல்ல!

சென்னையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் தமிழகஅரசு போலீசை மட்டும் நம்பிஇருக்கிறது தெரியவருகிறது.மக்களை வெளியே வரவிடாமல் செய்வதன் மூலம் கொரோனாவை தடுத்து விடலாம் என நினைக்கிறது    சென்னை முழுதும் நள்ளிரவு முதல் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, சென்னை நகரம் போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது. கட்டுப்பாடுகளை ...

மேலும் படிக்க »

மருத்துவமனையை சுத்தமாக வைக்க சொன்ன அசாம் மாநில எம்எல்ஏ அமிமுல் இஸ்லாம் தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது!

மருத்துவமனையை சுத்தமாக வைக்க சொன்ன அசாம் மாநில எம்எல்ஏ அமிமுல் இஸ்லாம் தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது!

அசாமில் கரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவமனைகள் சரியாக இல்லை என்று பேசியதற்காக  அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏ அமிமுல் இஸ்லாமை போலீஸார் நேற்று கைது செய்தனர். அசாமில் கரோனா நோய்த்தொற்றுக்கான மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்படும் இடங்கள், தடுப்புக் காவல் மையங்கள் இவைகள் எல்லாம் மோசமாக உள்ளன.நோய் தொற்று அழிக்க பயன்படுத்தப்படும் கருவிகள் சரியான ...

மேலும் படிக்க »

அரசு மருத்துவமனைகளில் சலூன் கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் சலூன் கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு

கர்நாடகா மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சலூன் கண்டிப்பாக அமைக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சார்பில் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தலை கொள்ளாத முடி அடர்ந்த தாடியுடன் இருக்கும் நோயாளிகள் ஷேவ் செய்து முடி வெட்டிக் கொள்ளும்போது அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் விரைவில் நோயாளிகள் ...

மேலும் படிக்க »

முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று நம்புகிறேன்: ரோசய்யா

முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று நம்புகிறேன்: ரோசய்யா

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை அவ்வவ்போது அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறது. இதனிடையே, தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் மட்டுமல்லாமல் தேசிய கட்சிகளின் தலைவர்களும் முதல்வரின் உடல்நிலை ...

மேலும் படிக்க »

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சென்னை அப்பல்லோ மருத்துமனைக்கு வருகை

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சென்னை அப்பல்லோ மருத்துமனைக்கு வருகை

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை அவ்வவ்போது அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறது. இதனிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன் தினம் அப்பல்லோ மருத்துவமனை ...

மேலும் படிக்க »

மருத்துவமனை நிர்வாகம் எனக்கு உதவாததால் மனைவியின் உடலை 10 கி.மீ சுமந்து சென்றேன்; கண்ணீர் பேட்டி

மருத்துவமனை நிர்வாகம் எனக்கு உதவாததால் மனைவியின் உடலை 10 கி.மீ சுமந்து சென்றேன்;  கண்ணீர் பேட்டி

மருத்துவமனையில் என்னுடைய மனைவி உயிரிழந்த பின்னர் எனக்கு உதவமுடியாது என்றனர் என்று ஒடிசாவில் மனைவியின் உடலை 6 மணிநேரங்கள் சுமந்தவர் கூறிஉள்ளார். ஒடிசா மாநிலம் காலாகேண்டி அரசு மருத்துவமனையில் காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமாங் டெய் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது கணவர் தானா மஜ்கி தனது ...

மேலும் படிக்க »

தனியார் மருத்துவமனைக்கான வழிகாட்டி, நெறிமுறைகள் உள்ளனவா: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தனியார் மருத்துவமனைக்கான வழிகாட்டி, நெறிமுறைகள் உள்ளனவா: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தனியார் மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை மையங்களிலும், அவசர சிகிச்சை மையங்களிலும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளின் உறவினர்கள் தெரிந்து கொள்வது பற்றி ஏதேனும் வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளனவா என்று கேட்டு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசித் பரன் மண்டல் என்பவர், ...

மேலும் படிக்க »

சிரியாவில் மருத்துவமனை மீது குண்டு தாக்குதல்

சிரியாவில் மருத்துவமனை மீது குண்டு தாக்குதல்

சிரியாவின் இதீப் மாகாணத்திற்கு சேவை வழங்கும் மகப்பேறு மருத்துவமனை ஒன்று குண்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக குழந்தைகளைக் காக்கும் அமைப்பு தெரிவித்திருக்கிறது. நோயாளிகளிலும், மருத்துவமனை ஊழியர்களிலும் இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாதத்திற்கு சுமார் 700 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் பிறந்திருக்கின்றன. அலெப்போ நகரின் தென் மேற்கில் அமைந்திருக்கும் இதீப் மாகாணத்தின் பெரும் பகுதி அதிபர் ...

மேலும் படிக்க »

மின் தடையால் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் 21 நோயாளிகள் பலி

மின் தடையால் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் 21 நோயாளிகள் பலி

ஐதராபாத்தில் காந்தி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 1200 படுக்கை வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் உள் நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நிலையில் காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் மின்தடை காரணமாக 21 நோயாளிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் ...

மேலும் படிக்க »

கண்பார்வை பாதிப்பு: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையர் நோட்டீஸ்

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது குறித்து தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 18 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயரிய சிகிச்சை ...

மேலும் படிக்க »
Scroll To Top