Tag Archives: மதிமுக

முடிந்தால் ம.தி.மு.க.வை தடை செய்து பாருங்கள்: வைகோ சவால்!

முடிந்தால் ம.தி.மு.க.வை தடை செய்து பாருங்கள்: வைகோ சவால்!

ம.தி.மு.க.வை முடிந்தால் தடை செய்து பாருங்கள் என்று பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்துள்ள வைகோ, சுப்பிரமணிய சுவாமி ராஜபக்சேவின் ஏஜெண்ட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனக் கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”பா.ஜ.க. அகில இந்திய தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, ‘வைகோ நாவை அடக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களுக்கு ...

மேலும் படிக்க »

எச்.ராஜாவுக்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்!

எச்.ராஜாவுக்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு மே பதினேழு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் தளத்தில் மே பதினேழு இயக்கம் வெளியிட்டிருக்கும் கண்டன செய்தி பின்வருமாறு :- “மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் ரீதியில் பேசிய பாஜக வின் H.ராஜாவை மே ...

மேலும் படிக்க »

ஹெச்.ராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன்

ஹெச்.ராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை எச்சரித்து மிரட்டி பேசிய பாஜகவின் ஹெச்.ராஜாவின் போக்கை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அளவிலான பொறுப்பிலிருக்கும் ஒருவர் தனது பதவிக்கேற்ற பக்குவமில்லாமலும், வயதுக்கேற்ற முதிர்ச்சியும் இல்லாமல் விளம்பரம் தேடும் வேட்கையில் வாய்க்கு ...

மேலும் படிக்க »

வைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

வைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மிரட்டும் தொணியில் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜி.ராமகிருஷ்ணன் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடியையோ, மத்திய அரசையோ அல்லது ராஜ்நாத்சிங் போன்ற தலைவர்களைப் பற்றியோ வைகோ தொடர்ந்து பேசினால் ...

மேலும் படிக்க »

ஹெச்.ராஜா வீ்ட்டை முற்றுகையிட முயன்ற ம.தி.மு.க.வினர் கைது!

ஹெச்.ராஜா வீ்ட்டை முற்றுகையிட முயன்ற ம.தி.மு.க.வினர் கைது!

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற மதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூரில் நேற்று பேட்டி அளித்த ஹெச்.ராஜா, பிரதமர் மோடியையோ, மத்திய அரசையோ அல்லது ராஜ்நாத் சிங் போன்ற நாடு போற்றும் நல்ல தலைவர்களையோ பற்றி வைகோ தொடர்ந்து பேசினால் அவர் செல்லும் இடங்களில் பேசிவிட்டு பாதுகாப்பாக திரும்ப முடியாது என்று ...

மேலும் படிக்க »

எச்.ராஜாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடக்கூடாது: வைகோ வேண்டுகோள்!

எச்.ராஜாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடக்கூடாது: வைகோ வேண்டுகோள்!

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிரான செயல்களில் தொண்டர்கள் யாரும் ஈடுபடக்கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ம.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழர்களுக்கு விரோதமான கருத்துக்களையோ, செயல்களையோ செய்யும் கட்சி தலைவர்களை விமர்சிக்க ஒரு போதும் தயங்காதவர் வைகோ. அவரின் விமர்சனங்களை மாற்றுக்கட்சி தலைவர்கள் ...

மேலும் படிக்க »

கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட பிரபாகரன் பிறந்த நாள் விழா!

கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட பிரபாகரன் பிறந்த நாள் விழா!

விடுதலை புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்தநாள் விழா போலிஸாரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் நேற்று(27-11-2014) கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, சென்னை ராயபேட்டையில் 25-11-2014 நள்ளிரவு 12.00மணிக்கு  பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 60கிலோ எடையுள்ள கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வீரமுழக்கமிட்டும், தமிழரின் ...

மேலும் படிக்க »

தியாகத்திருநாள் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றத்தில் மதிமுக வழக்கு

தியாகத்திருநாள் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றத்தில் மதிமுக வழக்கு

மதிமுக சார்பில் சென்னை தியாகராய நகரில் நாளை மறுநாள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதையடுத்து, அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தென்சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் வேளச்சேரி மணிமாறன் இதற்கான மனுவினை தாக்கல் செய்துள்ளார். அதில், தியாகத்திருநாள் என்ற பெயரில் நடத்தப்பட உள்ள பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க உத்தரவிட ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

தமிழ்நாட்டில் உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– வடகிழக்குப் பருவமழை நன்கு பெய்து அணைகளில் போதுமான அளவு நீர் நிரம்பி வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், நடப்பு சம்பா பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ரசாயன உரம், யூரியா தட்டுப்பாடு நிலவுவதால் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் மூலம் ...

மேலும் படிக்க »

முழு மதுவிலக்கு அமல்படுத்த கோரி ம.தி.மு.க. அறப்போர் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

முழு மதுவிலக்கு அமல்படுத்த கோரி ம.தி.மு.க. அறப்போர் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த கோரி ம.தி.மு.க. சார்பில் அறப்போர் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி ம.தி.மு.க. தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றது. மேலும் சில அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மக்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top