Tag Archives: பறிமுதல்

ரபேல் ஊழலை அம்பலப்படுத்தும் புத்தகங்கள் பறிமுதல்; தேர்தல் ஆணையத்தின் பெயரில் போலிஸ் அத்துமீறல்!

ரபேல் ஊழலை அம்பலப்படுத்தும் புத்தகங்கள் பறிமுதல்; தேர்தல் ஆணையத்தின் பெயரில் போலிஸ் அத்துமீறல்!

நாட்டை உலுக்கிய ஒரு மாபெரும் ஊழல் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகாமல் புதைகுழிக்குப் போய்க் கொண்டிருக்கிறது. அதுதான் ரபேல் பேர ஊழல். இது இந்திய விமானப் படைக்கு போர் விமானங்கள் வாங்குவது சம்பந்தமான பேரம். ரபேல் பேர ஊழல் மூலம் போர் விமானம் வாங்குவதில் முறைகேடு செய்ததோடு, அதன் மூலம் ஊழலை ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்ட நடைமுறைகளை கைவிட்டு, அரசின் ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவின் வெளிநாட்டு சொத்துகளும் அமலாக்கப்பிரிவு பறிமுதல்

விஜய் மல்லையாவின் வெளிநாட்டு சொத்துகளும் அமலாக்கப்பிரிவு பறிமுதல்

டெல்லி நீதிமன்றத்தில் தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் மூன்றாவது முறையாக அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய நோட்டீஸ் விடுக்கும் பணிகளை அமலாக்கப்பிரிவு தொடங்கியுள்ளது. வங்கிக் கடன் மோசடி விவகாரத்தில் லண்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் ரூ. 8,041 கோடி மதிப்புள்ள சொத்துகளை இதுவரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து ...

மேலும் படிக்க »

கன்டெய்னரில் ரூ.570 கோடி பறிமுதல் வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை :உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

கன்டெய்னரில் ரூ.570 கோடி பறிமுதல் வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை :உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில், திருப்பூரில் 3 கன்டெய்னர்களில் பிடிபட்ட ரூ.570 கோடி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், “ரூ. 570 ...

மேலும் படிக்க »

பறிமுதல் செய்யப்பட்ட விஜய் மல்லையாவின் பங்களா

பறிமுதல் செய்யப்பட்ட விஜய் மல்லையாவின் பங்களா

தங்களிடமிருந்து பெற்ற கடன் தொகைகளை வசூல் செய்யும் வகையில் கிங்ஃபிஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கோவாவில் உள்ள அவரது பங்களாவை பாரத ஸ்டேட் வங்கி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தது. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து சுமார் ரூ.9,600 கோடி கடன் பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக விஜய் மல்லையா மீது உச்ச ...

மேலும் படிக்க »

சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.25 லட்சம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.25 லட்சம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று நள்ளிரவு 1.30 அளவில் ஒரு விமானம் புறப்பட்டது. அதில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். சகாபுதீன் (44) என்பரின் கைப்பையை சோதனையிட்ட போது அதில் ரூ.25 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை ...

மேலும் படிக்க »

டெல்லி ஏர்போர்ட்டில் ரூ.77 லட்சம் மதிப்பு தங்கத்துடன் பெண் கைது

டெல்லி ஏர்போர்ட்டில் ரூ.77 லட்சம் மதிப்பு தங்கத்துடன் பெண் கைது

பாங்காக்கில் இருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணி ஒருவரிடம் இருந்து 77 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். பாங்காக்கில் இருந்து இன்று புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. இதில் இருந்து பயணிகள் தங்கள் லக்கேஜ்களுடன் வெளியேறினர். அப்போது ...

மேலும் படிக்க »

பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படை சோதனை: நாடு முழுவதும் ரூ.283 கோடி பறிமுதல்

பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படை சோதனை: நாடு முழுவதும் ரூ.283 கோடி பறிமுதல்

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தலைமை தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. நாடெங்கும் சிறப்பு பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. முக்கிய இடங்களில் கண்காணிப்பும் இடைவிடாமல் நடந்தது. தேர்தல் கமிஷனின் இந்த கிடுக்குப்பிடி நடவடிக்கைகளால் பெரிய அளவில் பணம் கொண்டு செல்லப்படுவது தடுக்கப்பட்டது. ஆனால் வியாபார பிரமுகர்களுக்கு ...

மேலும் படிக்க »

திருவண்ணாமலை அருகே ரூ.94 லட்சம் பறிமுதல்!

திருவண்ணாமலை அருகே ரூ.94 லட்சம் பறிமுதல்!

திருவண்ணாமலை அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட 94 லட்சத்து 23 ஆயிரத்து 700 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக இரவு நேரத்தில் பணம் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை முறையாறு ...

மேலும் படிக்க »

நெல்லையில் 30 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்!

நெல்லையில் 30 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்!

நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் அருகே, முறையான ஆவணங்கள் இன்றி, வேனில் கொண்டு செல்லப்பட்ட 30 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 8 கோடியே 91 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. தனியார் நகைக்கடைக்கு சொந்தமான இந்த தங்கக் கட்டிகள் மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நெல்லை ...

மேலும் படிக்க »

வியாபாரிகளை குறி வைக்கும் போலி தேர்தல் பறக்கும் படை!

வியாபாரிகளை குறி வைக்கும் போலி தேர்தல் பறக்கும் படை!

பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி பணம், நகை, பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லும் வியாபாரிகள் அதற்குரிய ஆவணத்தை கொண்டு செல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தேர்தல் ஆணையத்திடம் வியாபாரிகள் ...

மேலும் படிக்க »
Scroll To Top