Tag Archives: தெலங்கானா

தெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பந்த்;எதிர்கட்சிகள் ஆதரவு

தெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பந்த்;எதிர்கட்சிகள் ஆதரவு

தெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 15-வது நாளாக தொடருகிறது இந்நிலையில் இன்று போராட்டக்குழு  பந்த் அறிவித்து இருந்தது இன்று நடக்கும் பந்த்துக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளதால், மாநிலத்தில் போக்குவரத்து முடங்கியது, கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகளும், தொழிலாளர்கள் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் சேர்ந்துள்ளதால், முதல்வர் ...

மேலும் படிக்க »

தெலங்கானாவில் நீதித் துறை ஊழியர்கள் 8,000 பேர் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தெலங்கானாவில் நீதித் துறை ஊழியர்கள் 8,000 பேர் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தெலங்கானாவுக்கென தனி நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி அந்த மாநில நீதித் துறை ஊழியர்கள் 8,000 பேர் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். ஆந்திரத்திலிருந்து தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்ட பிறகு இரண்டுக்கும் பொதுவாக ஹைதராபாத் உயர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. மேலும், ஆந்திரத்தைச் சேர்ந்த நீதிபதிகள் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் ...

மேலும் படிக்க »

ஹைதராபாத்தில் போலியோ கிருமி இருப்பதாக கண்டுபிடிப்பு

ஹைதராபாத்தில் போலியோ கிருமி இருப்பதாக கண்டுபிடிப்பு

தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள கால்வாய் நீரை பரிசோதித்ததில் போலியோ கிருமிகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநில அரசு பொதுமக்களை உஷார் படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராஜேஸ்வர் திவாரி, கூறும் போது அம்பெர்பெட் நகரில் கழிவுநீர் நீர் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வக சோதனையில் போலியோ கிருமிகள் இருப்பது ...

மேலும் படிக்க »

தெலங்கானா உதயமாகி 2 ஆண்டு நிறைவு: விழா கோலம் பூண்டது ஐதராபாத்

தெலங்கானா உதயமாகி 2 ஆண்டு நிறைவு: விழா கோலம் பூண்டது ஐதராபாத்

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு இன்றுடன்‌ இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி தலைநகர் ஐதராபாத் விழா கோலம் பூண்டுள்ளது. நகரின் முக்கிய கட்டடங்களும், அரசு அலுவலகங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்டு கடந்த 2014-ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானது.

மேலும் படிக்க »

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. ஏற்கெனவே தமிழக அரசும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ...

மேலும் படிக்க »

நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்: ஒடிஸா, தெலங்கானாவில் 65 பேர் பலி!

நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்: ஒடிஸா, தெலங்கானாவில் 65 பேர் பலி!

நாடு முழுவதும் உள்ள 25-க்கும் மேற்பட்ட வானிலை ஆய்வு மையங்கள் அளித்துள்ள தகவல்களின்படி, பெரும்பாலான மாநிலங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பநிலை நீடிக்கிறது. அனல் காற்று வீசுவதன் காரணமாக இதுவரை, தெலங்கானாவில் 35 பேரும், ஒடிஸாவில் 30 பேரும் உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து இந்திய வானிலை மையத்தின் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரத்தின் விதர்பா, ...

மேலும் படிக்க »

கடனை தள்ளுபடி செய்யக்கோரி: சென்னையில் ரிசர்வ் வங்கி முன்பு விவசாய சங்கங்கள் நாளை ஆர்ப்பாட்டம்

கடனை தள்ளுபடி செய்யக்கோரி: சென்னையில் ரிசர்வ் வங்கி முன்பு விவசாய சங்கங்கள் நாளை ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரூ.1.40 லட்சம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னையில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாளை (மார்ச் 22) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுவின் செயலர் எம்.அர்ச்சுனன் கூறியதாவது: டிராக்டர் கடன் தவணையைக் கட்டவில்லை என்பதற்காக தஞ்சை ...

மேலும் படிக்க »

150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மரணம்

150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மரணம்

தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் நேற்று காலையில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்க, வருவாய் துறை, போலீஸார், தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேடக் மாவட்டம், புல்கல் மண்டலம், பொம்மாரெட்டி கூடம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கும்மரி ராயுலு, மொகிலம்மாள் தம்பதிக்கு பாலய்யா (5), ராகேஷ் (3) ...

மேலும் படிக்க »

சிலிண்டர் மானியம் ரத்து: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சூசகம்

சிலிண்டர் மானியம் ரத்து: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சூசகம்

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மானிய விலை எல்பிஜி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார். ஆந்திரா மற்றும் தெலங்கானா வர்த்தக பேரவை சார்பில் ஹைதராபாத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: ...

மேலும் படிக்க »

விவசாயிகள் தற்கொலை செய்வது ஏன்?- ஆந்திரா, தெலங்கானா அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

விவசாயிகள் தற்கொலை செய்வது ஏன்?- ஆந்திரா, தெலங்கானா அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

ஆந்திரா, தெலங்கானாவில் விவசாயிகளின் தற்கொலை குறித்து இரு மாநில அரசுகளும் விளக்கம் அளிக்க வேண்டும் என ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் விவசாயிகள் தற்கொலை தொடர்வதாகவும், மாநில அரசுகள் இதற்கு நிரந்தரத் தீர்வு காணாமல் அலட்சியம் காட்டுவதாகவும் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top