Tag Archives: சீனிவாசன்

பி.சி.சி.ஐ. தலைவர் தேர்தலில் சீனிவாசன் போட்டியிட முடியாது: உச்சநீதிமன்றம்!

பி.சி.சி.ஐ. தலைவர் தேர்தலில் சீனிவாசன் போட்டியிட முடியாது: உச்சநீதிமன்றம்!

ஐ.பி.எல். போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் பெட்டிங்கில் ஈடுபட்டனர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் விருப்பம் கொண்டிருந்ததன் காரணமாக, அதன் தலைவர் பதவிக்கு ...

மேலும் படிக்க »

பி.சி.சி.ஐ. சீனிவாசன் செயல்பாடு : உச்சநீதிமன்றம் கருத்து!

பி.சி.சி.ஐ. சீனிவாசன் செயல்பாடு : உச்சநீதிமன்றம் கருத்து!

பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த சீனிவாசன் ஆதாயம் தரும் வகையில் செயல்படவில்லை என்பதை ஏற்பது கடினம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தபோது, ஓய்வு பெற்ற முகுல் முத்கல் கமிட்டி அறிக்கையில் சீனிவாசனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் ...

மேலும் படிக்க »

ஐபிஎல் சூதாட்டம்: சீனிவாசனிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

ஐபிஎல் சூதாட்டம்: சீனிவாசனிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

ஐபிஎல் சூதாட்ட வழக்கில், சீனிவாசனுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. முத்கல் கமிட்டி வழங்கிய அறிக்கை தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில்  இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உண்மையான நம்பகத்தன்மையுடன் கிரிக்கெட் விளையாட்டு இருக்க வேண்டும் என தெரிவித்தனர். இது போன்ற சூதாட்டம் மீண்டும் நடந்தால், கிரிக்கெட்டை கொன்று விடுவதாக அர்த்தம் என கருத்து தெரிவித்த ...

மேலும் படிக்க »

பிசிசிஐ தலைவராக மீண்டும் பணியாற்ற அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீனிவாசன் மனு!

பிசிசிஐ தலைவராக மீண்டும் பணியாற்ற அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீனிவாசன் மனு!

ஐ.பி.எல். போட்டிகளின் போது மேட்ச் பிக்சிங் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இக்குற்றச்சாட்டில் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. எனவே அதன் தலைவராக இருந்த சீனிவாசனுக்கு அப்பதவியில் தொடர உச்சநீதிமன்றம் ...

மேலும் படிக்க »

ஐபிஎல் சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை: முத்கல் குழு அறிக்கை தாக்கல்!

ஐபிஎல் சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை: முத்கல் குழு அறிக்கை தாக்கல்!

ஐபிஎல் சூதாட்டத்தில் தற்போதைய ஐசிசி தலைவரான சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் முத்கல் குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான விசாரணையை பாதிக்கும் வகையில் ஸ்ரீநிவாசன் செயல்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ராவிற்கு ஐபிஎல் சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு இருந்ததாகவும், ...

மேலும் படிக்க »

பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் தேர்தலில் சீனிவாசன் போட்டியிட தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்!

பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் தேர்தலில் சீனிவாசன் போட்டியிட தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்!

பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் தேர்தலில் சீனிவாசன் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிர்வாகிகள் தேர்தலை வருகின்ற 30 ஆம் தேதி நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. அதில் என்.சீனிவாசன் போட்டியிடக் கூடாது என பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ் தாகூர், இப்ராகிம் ...

மேலும் படிக்க »

உண்மை சம்பவ கதையில் ரவுடியாக நடிக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன்

உண்மை சம்பவ கதையில் ரவுடியாக நடிக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன்

ஆக்கம் என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தை இயக்குனர் களஞ்சியத்திடம் உதவியாளராக பணியாற்றிய ஞானசம்பந்தம் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகனாக சதீஷ் ராகவன் என்ற புதுமுகம் நடிக்கிறார். வைதேகி கதாநாயகியாக நடிக்கிறார். மலையாளத்தில் சில படங்களில் நடித்த இவர், தற்போது இந்த படத்தின் மூலம் ...

மேலும் படிக்க »

வேட்டி விவகாரத்தில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்போம்: சீனிவாசன்

வேட்டி விவகாரத்தில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்போம்:  சீனிவாசன்

சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டி அணிந்து வருவதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று செயல்படுவோம் என்று ஐசிசி தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் வளாகத்தில் அவருக்கு நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘வேட்டி அணிந்தவர்களை கிளப்பில் அனுமதிக்கவில்லை என்ற தகவல் எனக்குத் தெரியாது. ...

மேலும் படிக்க »

ஐ.சி.சி. தலைவராக சீனிவாசன் இன்று பொறுப்பேற்பு!

ஐ.சி.சி. தலைவராக சீனிவாசன் இன்று பொறுப்பேற்பு!

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சீனிவாசன் இன்று பொறுப்பேற்றார். ஐ.பி.எல். போட்டியில் நடைபெற்ற சூதாட்டத்தில் சென்னை அணியின் உரிமையாளரான சீனிவாசனின் மருமகன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர்மீதான விசாரணை நம்பகத்தன்மையாக நடைபெற சீனிவாசன் இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை தற்காலிகமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் அவர் தற்காலிகமாக இந்திய கிரிக்கெட் சங்கத் ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக சீனிவாசன் மீண்டும் தேர்வு!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக சீனிவாசன் மீண்டும் தேர்வு!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக சீனிவாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 84வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. அதில், நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், சங்கத்தின் தலைவராக என்.சீனிவாசன் தொடர்ந்து 14வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக காசி விஸ்வநாதனும், ...

மேலும் படிக்க »
Scroll To Top