Tag Archives: இலங்கை அதிபர்

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க மாட்டோம்- கோத்தபய ராஜபக்சே ஆணவப் பேச்சு

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க மாட்டோம்- கோத்தபய ராஜபக்சே ஆணவப் பேச்சு

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது கடந்த 2009-ம் ஆண்டு இறுதி கட்ட போர் நடைபெற்றது. அப்போது மகிந்த ராஜபக்சேவின் தம்பியும், தற்போதைய அதிபருமான கோத்தபய ராஜபக்சே ராணுவ மந்திரியாக இருந்தார். இவர்தான் இறுதி கட்ட போரை முன்னின்று ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா  இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்த, ‘பிரிக்ஸ்’ கூட்டமைப் பின், எட்டாவது மாநாடு, கோவா மாநிலத்தின் பெனாலிம் பகுதியில் நேற்று துவங்கியது. அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம் போன்ற நாட்டு தலைவர்களையும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று இரவு கோவா வந்த இலங்கை ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபர் சிறிசேனா 14-ந் தேதி இந்தியா வருகிறார்

இலங்கை அதிபர் சிறிசேனா 14-ந் தேதி இந்தியா வருகிறார்

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) இந்தியா வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள உலகப்புகழ்பெற்ற புத்த மடாலயத்துக்கு சென்று அவர் வழிபடுகிறார். சிறிசேனா வருகையையொட்டி மத்திய பிரதேச மாநில தலைமைச் செயலாளர் அந்தோணி தேசா சாஞ்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

மேலும் படிக்க »

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு எந்த வழியிலும் அனுமதிக்க மாட்டோம்: சிறிசேனா

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு எந்த வழியிலும் அனுமதிக்க மாட்டோம்: சிறிசேனா

நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு எந்த வழியிலும் இடம் தரமாட்டோம் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேனா தெரிவித்தார். இலங்கையில் தேசிய படை வீரர் நினைவு அணிவகுப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா இந்த தருணத்தில் போரில் உயிரிழந்த முப்படையின் வீரர்களையும் நினைவு கூர்வதாகவும், நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபரை தமிழகத்துக்கு அழைத்துப் பேச வேண்டும்: திருமாவளவன்

இலங்கை அதிபரை தமிழகத்துக்கு அழைத்துப் பேச வேண்டும்: திருமாவளவன்

தமிழக அரசே முன்முயற்சி எடுத்து இலங்கை அதிபரை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து மீனவப் பிரதிநிதிகளின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வதும், அவர்களது படகுகளைப் ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர் பிரச்சினை: இலங்கை அதிபருடன் நாளை பேச்சுவார்த்தை!

தமிழக மீனவர் பிரச்சினை: இலங்கை அதிபருடன் நாளை பேச்சுவார்த்தை!

தமிழக, இலங்கை மீனவர்களிடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை சென்னையில் கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. அப்போது தமிழக மீனவர்கள் சார்பில், ஆண்டுக்கு 83 நாட்கள் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை, இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி உட்பட 7 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கைகள் குறித்து மே மாதம் முடிவை அறிவிப்பதாக ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபரின் அதிகாரங்கள் குறைப்பு: 19 ஆவது சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல்!

இலங்கை அதிபரின் அதிகாரங்கள் குறைப்பு: 19 ஆவது சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல்!

அதிபரின் அதிகாரங்களை குறைப்பதற்கான 19 ஆவது சட்டத்திருத்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, 62 பக்க ஆவணங்களை தாக்கல் செய்தார். இதன்படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம். நாடாளுமன்றத்தை தன்னிச்சையாக கலைக்கும் அதிபரின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைவராகவும், அரசின் தலைவராகவும் அதிபர் ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபர் சிறிசேன நரேந்திர மோடி சந்திப்பு!

இலங்கை அதிபர் சிறிசேன நரேந்திர மோடி சந்திப்பு!

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேன, இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நண்பகல் 12.15 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் சிறிசேன சந்தித்தார். ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபர் மைத்திரபால சிறிசேன இன்று இந்தியா வருகை!

இலங்கை அதிபர் மைத்திரபால சிறிசேன இன்று இந்தியா வருகை!

இலங்கை அதிபர் மைத்திரபால சிறிசேன, 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இலங்கையின் அதிபராக பதவியேற்ற பிறகு சிறிசேன மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். நாளை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது மீனவ பிரச்னை, தமிழர் விவகாரத்தில் இலங்கை மேற்கொண்டுள்ள நல்லிணக்க ...

மேலும் படிக்க »

சிங்களப் பேரினவாதம் என்ற நாணயத்தின் மற்றொரு பக்கம்தான் சிறிசேனா: வைகோ

சிங்களப் பேரினவாதம் என்ற நாணயத்தின் மற்றொரு பக்கம்தான் சிறிசேனா: வைகோ

சிங்களப் பேரினவாதம் என்ற நாணயத்தின் மற்றொரு பக்கம்தான் இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கிற மைத்திரி பால சிறிசேன என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.. இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்து இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தனி இறையாண்மையுடன் சுதந்திரமான அரசு நடத்தி ...

மேலும் படிக்க »
Scroll To Top