Tag Archives: ஆர்ப்பாட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு! ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு!!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு! ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு!!

கடந்த மாதம் 26-ந்தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக வேல்முருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து, மக்களை பார்க்க சென்றவரை போலிஸ் கைது செய்தது. பிறகு அவர் மீது சுங்கச் சாவடியை தாக்கியதாக வழக்கு போட்டது. அதன் ...

மேலும் படிக்க »

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு- சேலத்தில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு- சேலத்தில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் இருந்து சென்னைக்கு 277 கி.மீ. தூரத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சேலம்- சென்னை 8 வழி ...

மேலும் படிக்க »

குஜராத் வாழ் தமிழ் மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

குஜராத் வாழ் தமிழ் மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குஜராத் வாழ் தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் காவிரி, மீத்தேன், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்பினர் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காவிரி வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்திலும் ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்த்து பிப். 5-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்த்து பிப். 5-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் ‘நீட் தேர்வும் – விளைவுகளும்’ என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் இக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் ...

மேலும் படிக்க »

நெல்லிக்குப்பத்தில் சர்க்கரை ஆலை முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்: தே.மு.தி.க.வினர் கைது

நெல்லிக்குப்பத்தில் சர்க்கரை ஆலை முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்: தே.மு.தி.க.வினர் கைது

விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை வழங்கக் கோரி கடலூர் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழகத்தில் மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் தே.மு.தி.க. போராடி வருகிறது. தற்போது அரசியலுக்கு யாரெல்லாமோ வருகிறார்கள், அவர்கள் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறுகிறார்கள். ...

மேலும் படிக்க »

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் கருப்பு கொடி காட்டி தி.மு.க. வினர் போராட்டம்

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் கருப்பு கொடி காட்டி தி.மு.க. வினர் போராட்டம்

தமிழகத்தில் மாவட்டந்தோறும் கவர்னர் பன்வாரிலால் சுற்றுப்பயணம் செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதை தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரான செயல்களில் கவர்னர் பன்வாரிலால் ஈடுபடுகிறார் என்று தமிழகத்தில் உள்ள அணைத்து காட்சிகள் மற்றும் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன. ஏற்கனவே கோவை, நெல்லை, குமரி, சேலம், கடலூர் ...

மேலும் படிக்க »

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

கரும்பு விவசாயிகளுக்கு நிலு வைத் தொகை வழங்காத தமிழக அரசை கண்டித்து சர்க்கரை ஆலைகள் முன்பு ஜனவரி 4-ம் தேதி தே.மு.தி.க முற்றுகைப் போராட்டம் நடத்தும் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை சுமார் 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. ...

மேலும் படிக்க »

கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி

கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒக்கி புயலில் சிக்கி மாயமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி இதுவரை என்னவென்று தெரியவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் வழங்கவில்லை. ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு உடனே அறிவிக்கவேண்டும். மேலும் காணாமல் போன ...

மேலும் படிக்க »

பா.ஜ.க.வின் வன்முறையை கண்டித்து கரூரில் 31-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க.வின் வன்முறையை கண்டித்து கரூரில் 31-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நன்மதிப்பை சிதைக்கும் வகையில் அண்மையில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை தெரிவித்த கருத்து மிகவும் அபாண்டமான அவதூறு ஆகும். அரசியல் ரீதியான விமர்சனங்களை சகித்துக்கொள்ள இயலாமல் நாகரிக வரம்புகளை மீறி அவர் தனிநபர் விமர்சனம் செய்ததால் விடுதலை சிறுத்தைகள் ...

மேலும் படிக்க »

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7–வது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஜாக்டோ–ஜியோ’ அமைப்பு சார்பில் கடந்த 7–ந்தேதி முதல் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top