அமித்ஷாவின் 500 கோடி ஊழல்

அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூபாய் நோட்டு தடைக்குப்பின் 500 கோடி ரூபாய் டெபாசிட் செய்யபட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 19 ஆம் தேதி அமலாக்க பிரிவு மற்றும் வருமானவரிதுறையினர் பல மணி நேரம் அங்கு சோதனை நடத்தியுள்ளனர்.

7

ரூபாய் நோட்டுகள் தடைசெய்யப்பட்ட நவம்பர் எட்டில் இருந்து மூன்று நாட்களுக்குள் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்சாவை இயக்குனராக கொண்ட அகமதா பாத் ஆசிரம் ரோட் கூட்டுறவு வங்கியில் 500 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. தெரியவந்து அமலாக்க பிரிவு மற்றும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த வங்கி சிறு வணிகர்களையும் விவசாயிகளையும் வாடிக்கையாலராக கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பணம்  நவம்பர் எட்டு இரவு முதலே இங்கு மாற்றபட்டுள்ளதாக  சொல்லப்படுகிறது.
கடந்த 21 ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் தலைமை செயளாலர் அலுவலகம் வீடு உட்பட நடத்தபட்ட ரெய்டுகளில் 30 லட்ச ரூபாய் மற்றும் 5 கிலோ தங்கம் கண்டுபிடிக்கபட்டது. இதனை முதன்மை படுத்தி 19ஆம்தேதி அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் நடத்தபட்ட சோதனை பற்றிய செய்திகள் மூடி மறைக்கபட்டுள்ளன.

மிகபெரிய தொகையான 500 கோடி ரூபாய் ரூபாய் நோட்டுகள் தடை செய்யபட்ட ஒற்றை இரவில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது 190 கிளைகளை கொண்ட இந்த வங்கியில் மிக பெரிய அளவிலான பணம் அதன் தலைமை அலுவலகமான அகமதாபாத்தில் மட்டும் செலுத்தபட்டுள்ளது.இந்த வங்கியின்சி சிடிவி காட்சிகளை வருமான வரிதுறையினர் சோதனை செய்து வருகிறார்கள்.
ரூபாய் நோட்டு தடைக்குபின் குஜராத்திலுள்ள பதினெட்டு கூட்டுறவு வங்கிகளில் மிக பெரிய அளவிலான பணத்தினை பாஜாகவினர் டெபாசிட் செய்துள்ளனர். இதில் பதினேழு வங்கிகள் பாஜக அரசின் கட்டுபாட்டில் வருபவை . அகமதாபாத் வங்கியின் அதிகார பூரவ இணையதளத்தில் அமித்சா அதன் இயன்குனர் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

இதே ரூபாய் நோட்டின் தடை அறிவிக்கபட்டபின் தமிழகத்தில் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகள் பணம் இன்றி காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டதும் இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைந்ததும் குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top