சென்னை டெஸ்ட்: இந்தியா 759 ரன்கள் குவித்து டிக்ளேர் ; 7 விக்கெட் இழப்பு

 

201612191722543351_chennai-test-india-759-runs-in-1st-innings-karun-nair-triple_secvpf

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.

 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் மொயீன் அலி 146 ரன்கள் குவிக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 477 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுலின் (199) அபார ஆட்டத்தால் இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்திருந்தது. கருண் நாயர் 71 ரன்னுடனும், முரளி விஜய் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர். முரளி விஜய் 29 ரன்கள் எடுத்த நிலையில் டவ்சன் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

அடுத்து கருண் நாயர் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கருண் நாயர் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதோடு நிற்காமல் அதை இரட்டை சதமாக மாற்றினார். அதேவேளையில் அஸ்வின் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 616 ரன்னாக இருக்கும்போது அஸ்வின் 67 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து கருண் நாயர் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இரட்டை சதம் அடித்த கருண் நாயர் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். இதனால் அவர் முச்சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். அதேநேரத்தில் ஜடேஜா அரைசதம் அடித்தார்.

கருண் நாயர் 299 ரன்கள் எடுத்திருக்கும்போது ஜடேஜா 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து உமேஷ் யாதவ் களம் இறங்கினார். 191-வது ஓவரை ரஷித் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி கருண் நாயர் முச்சதம் அடித்தார். அத்துடன் இந்தியா முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 190.7 ஓவர்களை சந்தித்து 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்தது. கருண் நாயர் 303 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

பின்னர் 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீர்ரகளாக களம் இறங்கினார்கள். 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி ஐந்து ஓவர்களை சந்தித்து விக்கெட் இழக்காமல் 12 ரன்கள் எடுத்துள்ளது. அலஸ்டைர் குக் 3 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top