முதல்வர் மரணமும் பா.ஜ.க சதிகளும்

கடந்த  செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை  கிரிம்ஸ்  சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு 75 நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 5  ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது . ஆனால்  அதற்கு முன் இரண்டு நாட்களாக 4 ஆம்  தேதி மாலை முதல் இன்று வரை நடக்கும்  நிகழ்வுகள் தமிழக மக்களுக்கு பெரும் சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது

15285057_1234644109944405_3120970245375909505_n

படம் இலியாஸ்

நான்காம் தேதி மாலை

நான்காம்  தேதி மாலை 6 மணி அளவில் அப்பலோ மருத்துவமனையில் ஒரு பதட்டமான சூழல்  நிலவ துவங்கியது. அன்று  இரவே அரசின் சில அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்தனர். மாலை  6.30 மணிக்கு சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் வருகை தந்தார், இரவு எழு மணிக்கு ஜெயலலிதாவின் அனைத்து அரசு பொறுப்புகளையும் வகிக்கும் அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் வருகை தந்தார். இதனை பின் தொடர்ந்து இரவு  7.15 மணியளவில்  ஆயுத படையினர் அப்பலோ முன்பு குவிக்கபட்டதை தொடர்ந்து ஊடகங்களில் முதல்வர் உடல் நிலை குறித்த விவாதங்கள் முன் வைக்கப்பட்டன. அதனால் தமிழகம் முழுவதும் ஒரு அசாதாரன நிலை உருவாகி அதிமுக  தொண்டர்கள் அப்பலோ நோக்கி படை எடுக்க முனைந்தனர். இரவு ஒன்பது மணிக்கு அப்பலோ  மருத்துவமனை  செயல் அதிகாரி, மாலையில் முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து  , தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் , மருத்துவ குழு முதல்வரின் உடல்நிலையை  கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

 ஆளுநர் ஆதிக்கம்

மகராஸ்டிராவின் ஆளுநராகவும், தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பையும்    வகிக்கும் வித்தியாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை வந்தார். இரவு 12 மணிக்கு அப்பலோவிற்கு வித்யாசாகரும், அப்பலோ தலைவர் பிரதாப் ரெட்டியும் வந்தனர்.முதல்வரின்  உடல் நிலை குறித்து விசாரித்த ஆளுநர் எந்த தகவலும் சொல்லாமல் ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.

இதன் பின் நடந்தவைகளை  நாம் உற்று பார்க்கின்ற போதுதான் சில  விடயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தின் ஆட்சியில் உள்துறை அமைச்சரை கலந்தாலோசிக்காமல், அன்று இரவு வரை மும்பையில் இருந்த பொறுப்பு ஆளுநர்  வித்யாசாகரிடம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ராஜ் நாத் சிங் ஆலோசிப்பதாகவும்  தேவைப்பட்டால் துணை ராணுவம் வரும் என்று செய்திகளை பரப்பியதை  தொடர்ந்து இந்த செய்திகளின் மூலமாக பரபரப்பை அதிகப்படுத்தி கொண்டே  இருந்தது மத்திய அரசு. அதே வேலையில் சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரத்தை மாற்றி அமைப்பதாகவும் ரயில்வே துறை அறிவித்தது .தமிழகத்தில் பதட்ட சூழலை உருவாக்க பல முயற்சிகள் நடந்து கொண்டிருந்த அதே வேலையில், தமிழக சட்ட ஒழுங்கு குறித்து  தமிழக காவல் துறை அமைச்சர், உள்துறை  அமைச்சர்  என அனைவரையும் புறக்கணித்து விட்டு ஆளுநரை மைய்யப்படுத்தி  பா.ஜ.க அரசு செயல் படுத்தத் துவங்கியது . மறுநாள் காலையில் தமிழகத்தை சுற்றி உள்ள  மாநிலங்களில் இருந்தும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. கர்நாடக எல்லையில் பேருந்துகளை தாக்கியதாக செய்திகள் ஓட துவங்கியன. ஆனால் முதல்வர் இறந்த பின்னும் கூட  தமிழகத்தில்  எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருந்தது குறிப்பிடதக்கது.

எம் எல் ஏ கூட்டத்தை தடுத்த வதந்தி

ஜெர்மனுக்கு செல்ல வேண்டிய  தனது பயணத்தை தவிர்த்து விட்டு தமிழக பாஜக தலைவர் தமிழிசை அப்பலோ வருகிறார். வெங்கையா நாயுடு மாலை சென்னை வருவதாக  மத்திய அரசு தெரிவிக்கும் , அதேவேலையில்  தமிழக ஆளுநரிடம் சட்டம் ஒழுங்கு குறித்து விசாரிப்பதாகவும் தேவைப்பட்டால் துணை ராணுவம் வருவதாகவும்  செய்திகள் மீண்டும்  வெளியிடப்படுகின்றன. 11 மணியளவில் அப்பலோ வளாகத்திலேயே  அதிமுக முன்னணியினர் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  எம் எல் ஏக்கள் கலந்து கொண்ட  கூட்டம் நடை பெற்றது. ஆனால் கூட்டத்தில்  என்ன முடிவெடுக்கப்பட்டது  என்று  தெரிவிக்கபடவில்லை. அதே  வேலையில் மாலையில்  அதிகாரப்பூர்வ  எம் எல் ஏக்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

ed2bfdd2-996a-4518-845f-38a8a0ab0492  அதிமுகவினரின் அதிகாரப்பூர்வ  எம் எல் ஏக்கள் கூட்டம் நடப்பதாக அறிவிக்கபட்ட மாலை ஆறு மணிக்கு ஜெ குறித்த  தகவல்கள் வரும் என்று பா.ஜ.கவின் சுப்ரமணியன் சாமி  தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  வதந்தி  பரப்புபவர்களை கைது செய்வோம் என்று சொன்ன தமிழக காவல் துறை  சுப்ரமணியன் சாமி மீது வழக்கு பதிவு செய்ததா என்று தெரியவில்லை. காவல் துறையினர் விடுப்பு  எடுக்க வேண்டாம் என்றும் காவல் அதிகாரி ஜார்ஜ் அறிவிப்பு வெளியிட்டார் தமிழகத்திற்கு கூடுதலாக இரண்டு ஐ.ஜிக்கள் நியமிக்கப்பட்டார்கள். அப்பொழுதும்  மத்திய அரசு துணை ராணுவம் அனுப்புவதாக தொடர்ந்து சொல்லி கொண்டே இருந்தது. மாலை 5.30 மணி அளவில் அதிமுக எம் எல் ஏக்கள் அதிமுக அலுவலகத்தில் கூடி இருந்தபோது திடிரென முதல்வர் மரணம் என்று  தொலைகாட்சிகள் செய்தி வெளியிட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சில நிமிடங்களில் அது தவறான செய்தி என்று  அப்பலோ மருத்துவமனை அறிவித்தது. இதனால் மாலையில் நடைபெற இருந்த எம் எல் ஏக்கள் கூட்டம் இரவு பதினோரு மணிக்கு  மாற்றப்பட்டது. அதற்குள் வெங்கையா நாயுடுவும் வந்து சேர்ந்தார்.

ee761beb-145e-4db4-b90f-9a8cbfb3b507

ஒரு முதல்வரின்  மரண செய்தியை  எப்படி ஊடகங்கள் தவறாக  சொல்லும்? அரசின் நிறுவனங்களோ அல்லது உளவு துறையோ, உள்துறையோ  தெரிவிக்காமல் இந்த  தகவல் பரவி இருக்காது. ஒரு வேளை தெரியாமல் பரப்ப பட்டிருந்தால் இந்நேரம் அது யார் செய்தது என்று கண்டுப்பிடித்து  நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் இதனை  மிக எளிதாக  கடந்து செல்ல முடிகிறது என்றால் இந்த வதந்தி ஏதோ  ஒரு காரணத்திற்காக பரப்பப் பட்டிருக்கிறது. அப்படி என்றால் இச்செயல்  மத்திய அரசிற்கு தெரிந்தே நடந்துள்ளது.

இந்த தகவல் பரவியதால்  நிகழ்ந்த  மிக முக்கியமான நிகழ்வானது அதிமுக எம் எல் ஏக்களின் சந்திப்பு மாற்றி அமைக்கப்பட்டதுதான் . வெங்கையா நாயுடு  வருகைக்கு முன்னால்  இரவு பதினோரு மணிக்கு அதிமுக எம் எல் ஏக்கள் மீண்டும் சந்திக்கும் பொழுது அப்பலோவால்    முதல்வரின் இறப்பு செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. அதிமுக ஒன்று கூடி தனது தலைவரை தேர்ந்தேடுப்பதை  தடுப்பற்காகவே  மாலை 5.30 மணிக்கு  பி.ஜெ.பி தான் இந்த வதந்தி பரப்பியிருக்கிறார்கள். வெங்கையா  நாயுடு சென்னை வந்தபின் மத்திய அரசு சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநரை  அலோசிப்பதாக  சொல்லி கொண்டிருந்தது  நிறுத்தப்பட்டது.

அப்படி என்றால் ஆளுநரிடம் சட்டம் ஒழுங்கு குறித்து  அலோசிப்பதாக பரப்பட்ட செய்தி என்பது அதிமுகவினருக்கு ஆளுநர் ஆட்சி குறித்து அச்சமூட்டத்தான் என்பதும், வெங்கையா நாயுடு வருவதற்கு முன் தங்கள் தலைவரை அவர்கள் தேர்வு செய்ய கூடாது என்றும் பி.ஜெ.பி  விரும்பியுள்ளது. முதல்வர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட அந்த இரவிலே மறுநாள் மாலை 6 மணிக்கு நல்லடக்கம் என்று அறிவிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது. தமிழக முழுவதும் பேருந்துகள் இயங்காத போது  ஒன்றரை  கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சியின் தலைவரை காண, இறுதி அஞ்சலி  செலுத்த  அவர் தொண்டர்கள் வருவதையும் தடுத்து, ஜெயலலிதா  என்கிற மக்கள் தலைவரின் கதையை ஒரே  நாளில் முடித்து வைக்க வேண்டிய  அவசியம் யாருக்கு வந்தது. இன்றும் அப்பாவி அதிமுக தொண்டன் மெரினாவில் வந்து மொட்டை போட்டுக்கொண்டிருக்கிறான்.

ராஜாஜி அரங்கில் ஆதிக்கம் செலுத்திய வெங்கையா

ஆறாம் தேதி ராஜாஜி அரங்கில் முதல்வர் வைக்கப்பட்டிருந்த  மேடையில் சசிகலாவும் மறு பக்கம் வெங்கையா நாயுடுவும் இருந்தார்கள், முதல்வரின் உடலுக்கு அருகில் அவர் கட்சியை சேர்ந்தவர்கள், இருப்பதுதான் நடைமுறை. ஆனால்  மத்திய அமைச்சர்  வெங்கையா நாயுடுவிற்கு அங்கு என்ன வேலை மேலும்  அங்கு  யார் எங்கேங்கே  இருக்க வேண்டும், நிற்கவேண்டும் என்று  அந்த  இடத்தின் அந்த இறுதி ஊர்வலத்தினை  அந்த இடத்தில்  அனைவருக்கும் உத்தரவிட்டு கொண்டிருந்தார்.

69

நடைமுறையில் அதிமுக வின் முன்னனியினரை தவிர மற்ற எம் எல் ஏக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்கள் இருந்தனர். மாற்று கட்சியினருக்கு என்று ஒரு இடம் ஒதுக்க பட்டிருக்கும் அஞ்சலி தெரிவித்து விட்டு அவர்கள் அங்கு செல்வதும்  மத்திய அமைச்சர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அவர்கள் செல்வதும் தான் வழக்கம், நடைமுறையை மீறி வெங்கையா நாயுடு முதல்வரின் உடல் அருகில் நாற்காலி போட்டு அமர்ந்து தன் ஆதிக்கத்தை காட்டி கொண்டே இருந்தார். தமிழக முதல்வர்  பன்னீர் செல்வம் படிகட்டுகளில் தான் அமர்ந்து இருந்தார்.

இறுதியாக எம்ஜியார் நினைவிடத்தில் இறுதி மரியாதை செலுத்தும் போது கூட ஆளுநருக்கு அடுத்து பொறுப்பு முதல்வர்தான் அஞ்சலி செலுத்த வேண்டும்  அதுதான் நடைமுறையாக இதுவரை இருந்துள்ளது. ஆனால் அப்பொழுது கூட முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு முன் வெங்கையா  நாயுடு  அஞ்சலி செலுத்துகிறார், நீங்கள் எங்களுக்கு பிறகுதான் என்று குறிப்பால் உணர்த்துவதுதான் அது. முதல்வரின் இறுதி நிகழ்வில் ஆதிக்கம் செலுத்தியது  முதல் நாள் மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பை தடுக்க முதல்வர் இறந்தாக பரப்பியது  முதல் வெங்கையா நாயிடு வரும் வரை ஆளுநர் ஆட்சி குறித்த அச்சத்தினை  உருவாக்கியது , ஐந்தாம் தேதி காலையிலேயே மற்ற மாநில பேருந்துகளை நிறுத்தி பதட்டத்தை உருவாக்கியது, முதல்வரின் இறப்பு குறித்த தகவல் வரும் என்று சுப்பரமணிய சாமியின் டிவிட்டர் பதிவு ,முதல்வர் இறந்ததாக 5.30 மணிக்கு வதந்தி பரப்பிய தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டே முதல்வர் இறுதி  ஊர்வலத்தில் வெற்றி சிரிப்போடு வந்தது என சேர்த்து நாம் பார்க்கும் போது   பாரதிய ஜனாதா கட்சி முதல்வர் மரணத்தை முன்வைத்து நடத்தும் சதிகளை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

veng

மா. நடராசன் திராவிட இயக்கத்தின் ஆட்சியை  அண்ணா, புரட்சி தலைவர் எம்ஜியார், புரட்சி தலைவி அம்மா  உள்ளிட்டவர்கள் விதைத்த விதைகள் இருக்கும் இவரை இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது என்று பேட்டி கொடுக்கும் போதே  அருகில் ஆசிர்வாதம் ஆச்சாரியா  நின்று கொண்டிருக்கிறார்.

மீண்டும் மீண்டும் தமிழக அதிமுக பிரதிநிதிகளுடன் பா.ஜ.கவினர் தங்கள் உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். கேரள பாஜகவின் பொது செயளாலர் சுரேந்திரன் பா.ஜ.க தமிழகத்தில் ஜெயலலிதாவின்  மரணத்தை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்கிறார். பா.ஜ.கவின் சுப்ரமணியன் சாமி இந்த இடைவெளியை பாஜாகாவினர் பயன்படுத்த வேண்டும் அதிமுக உடையும் என்று  கருத்து தெரிவித்து கொண்டிருக்கிறார்.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை பயன்படுத்தி   தமிழகத்தில் தன் அரசியலை விதைத்து விடலாம் என்று பி.ஜே.பி யினர் நினைப்பதனை புரிந்து கொண்டதால் தான் என்னவோ முதல்வர் இறந்த செய்தி வந்த உடனே  அப்பலோ வாசலில் இருந்த  ஜெயலலிதாவின் தொண்டர்கள் பாஜகவை திட்டி கொண்டிருந்தார்கள்  போல.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top