இரயில் டிக்கெட் விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினமாக பதிவு செய்ய திருநங்கையருக்கு இடம்

 

third-sex-sign-select-choice-42651334

ரயில்வே டிக்கெட் முன்பதிவு விண்ணப்பங்களில், மூன்றாம் பாலினமான திருநங்கையரை பதிவு செய்ய வாய்ப்பு வழங்காதது குறித்து டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புதுடெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே, ரயில் டிக்கெட் முன்பதிவின் போது விண்ணப்பங்களில், மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் விவரங் களை பதிவு செய்ய வாய்ப்பளிக் காதது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், ரயில்வே அமைச் சகம் நடவடிக்கை எடுத்து முன்பதிவு படிவங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் வழங்கும் விண்ணப்பங்களில், ஐஆர்சிடிசி இணையதளத்திலும் ஆண் மற்றும் பெண் என்பதுடன், திருநங்கையர் என 3-வது பாலினமாக சேர்க்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top