மோடி மன்னிப்பு கோர வேண்டும்; 7-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

 

parli

பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் தொடர்ந்து 7-வது நாளாக முடங்கியது.

 

இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதால் முக்கிய அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன.மோடி அதைப்பற்றி கவலை கொள்ளவில்லை!

 

ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்கக் கோரியும், வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தக் கோரியும் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பிரச்சினை எழுப்பி வருகின்றனர். இதனால் கடந்த 6 நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியுள்ளது.

 

இந்த சூழலில் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘முன்கூட்டியே தயாராவதற்கு அவகாசம் அளிக்காத காரணத்தினால் தான், எதிர்க்கட்சியினர் என்னை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கறுப்புப் பணத்துக்கு ஆதரவானவர்கள்’’ என தெரிவித்தார்.

 

இதனால் கடும் ஆவேசம் அடைந்த எதிர்க்கட்சியினர் நேற்று நாடாளுமன்ற மக்களவை கூடியதும் இப்பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘எதிர்க்கட்சிகள் கறுப்புப் பணத்துக்கு ஆதரவு அளிக்கின்றன என பிரதமர் தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல’’ என்றார்.

இதைத் தொடர்ந்து ஒட்டு மொத்த எதிர்க்கட்சியினரும் அவையின் மையப் பகுதிக்குச் சென்று பிரதமர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினர். மேலும், ‘‘துணிச்சல் இருந்தால் பிரதமர் மோடி மக்களவைக்கு வந்து பேசட்டும். எதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே இவ்வாறு கருத்து தெரிவிக்க வேண்டும்’’ என ஆவேசமாக குரல் எழுப்பினர்

 

இதனால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியதை அடுத்து 35 நிமிடங்கள் வரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை ஒத்திவைத்தார். மீண்டும் கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

 

மாநிலங்களவையிலும் நேற்று இப்பிரச்சினை வலுவாக எதிரொலித்தது. அவை கூடியதும் முன்னாள் எம்பி தீபன் கோஷ் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பேசிய பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ‘‘எதிர்க்கட்சியினர் கறுப்புப் பணம் வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தவறாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்’’ என்றார்.

 

 

எதிர்க்கட்சித் தலைவரான குலாம் நபி ஆசாத், ‘‘ரூபாய் நோட்டுகள் வாபஸ் தொடர்பாக நேற்று (நேற்று முன்தினம்) நடந்த விவாதத்தின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கறுப்புப் பணத்துக்கு எதிராக இருப்பதாக தெளிவாக விளக்கினர். அவ்வாறு இருந்தும் பிரதமர் நரேந்திர மோடி எப்படி இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கலாம். இதற்கு அவர் நிச்சயம் மன்னிப்பு கோரியே ஆக வேண்டும்’’ என்றார்.

 

 

ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ்வும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் வேண்டும் என வலியுறுத்தினார். இதே போல் சமாஜ் வாதி, திரிணமூல் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளைத் சேர்ந்த எம்பிக்களும் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நண் பகலுக்குள் இருமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

பின்னர் நண்பகலில் அவை கூடியபோது, கேள்வி நேரத்தை காங்கிரஸ் உறுப்பினர் வீணடிப்பதை ஏற்க முடியாது என மாநிலங்களவைத் தலைவர் அமீத் அன்சாரி தெரிவித்தார். அப்போது மீண்டும் பேச எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ‘‘ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் மீதும் மோசமான குற்றச்சாட்டை பிரதமர் மோடி முன் வைத்துள்ளார். இதைக் கேட்டுக் கொண்டு எங்களால் அமைதிகாக்க முடியாது. அவர் நிச்சயம் மன்னிப்பு கோர வேண்டும்’’ என்றார்.

 

 

அப்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, எதிர்க்கட்சிகள் முதலில் மன்னிப்பு கேட்டால், பிரதமரும் மன்னிப்பு கேட்பார் என்றார். இதனால் ஆவேசமடைந்த எதிர்க்கட்சியினர் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

 

துணிச்சல் இருந்தால் பிரதமர் மோடி மக்களவைக்கு வந்து பேசட்டும். எதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே இவ்வாறு கருத்து தெரிவிக்க வேண்டும்’’ என ஆவேசமாக குரல் எழுப்பினர்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top