அமெரிக்காவிற்கு சிம்ம சொப்னமாக விளங்கிய கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மரணம்!

‘‘விதைத்தவன் உறங்கலாம்.ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை’’

-பிடல் காஸ்ட்ரோ

quotespick-260-185

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவால் இன்று காலமானார்

கம்யூனிஸ்ட் புரட்சியாளரும் கியூபாவின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 90. கம்யூனிஸ தலைவர் பிடல் காஸ்ட்ரோ. கடந்த 2006ம் ஆண்டு மத்தியில் அவருக்கு திடீரென இரைப்பையில் கோளாறு ஏற்பட்டது. மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த காஸ்ட்ரோ உயிர் மீண்டு வந்தார்

 

கியூபாவை ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலமாக 1959 முதல் 2008ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர்,  அமெரிக்காவிற்கு சிம்ம சொப்னம்மாக இருந்தார் பிடல் காஸ்ட்ரோ,ஆரம்ப காலகட்டத்தில் பல வழிகளில் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்கா முயற்சி செய்ததாக தகவல்கள் உண்டு. காஸ்ட்ரோவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அவரை உயிராய் நேசிக்கும் கியூபா மக்கள் கவலையில் ஆழ்ந்தனர். எனினும் அவரின் உடல்நிலை படிப்படியாகத் தேறியது.

fidal

இனியும் தன்னால் அதிபர் பதவியில் சிறப்பாகச் செயல்பட முடியாது என்று நினைத்த அவர் அதிபர் பதவியை தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் கடந்த 2008-ம் ஆண்டு ஒப்படைத்தார். தற்போது அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை மட்டும் வழங்கி வந்தார். இந்த நிலையில் தனது 90வது வயதில் இன்று மரணமடைந்து விட்டதாக கியூபாவின் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்தது.

fidal-2


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top