மாநிலங்கவையில் நிதித்துறை இணையமைச்சர் பதில் 2,071 தொழிலதிபர்களின் வாராக்கடன் ரூ.3.89 லட்சம் கோடி

 

 

minister-of-state-for-finance-santosh-gangwar

 

மாநிலங்கவையில் நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் பதிலளிக்கையில் 2071 தொழிலதிபர்களின் வாராக் கடன் தொகை ரூ.3.89 லட்சம் கோடி என மாநிலங்களவைக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி இவ்வளவு தொகை வர வேண்டி இருக்கிறது என்றும், இந்த தொழில் அதிபர்கள் ரூ.50 கோடிக்கும் அல்லது அதற்கும் மேல் கடன் வாங்கி இருக்கிறார்கள் என்றும் தனது பதிலில் கூறியிருக்கிறார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தவர், வாராக்கடனைக் கையாளுவதற்காக புதிய வங்கி தொடங்கும் திட்டத்தை நிதி ஆயோக் பரிந்துரை செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top