63 கோடீசுவரர்களின் ரூ.7,016 கோடி கடன் தள்ளுபடி செய்த ஸ்டேட் பேங்க்!

15055687_1342254605785746_8074477668150526420_n

500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த 8-ந் தேதி தடை விதிக்கப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கி யில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 9-ந் தேதியில் இருந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகிறார்கள்.

உழைத்து சம்பாதித்த பணத்தை, வங்கியில் இருந்தும், ஏ.டி.எம்-மில் இருந்தும் எடுப்பதற்கு பல மடங்கு உழைக்க வேண்டியிருக்கிறது. ஒருநாளைக்கு 2,000 ரூபாய் எடுப்பதற்கே குறைந்தது இரண்டு மணி நேரமாகிறது. ஏ.டி.எம்-மில் ஒருநாளைக்கு 2,500 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்; வங்கிகளில் நாள் ஒன்றுக்கு 4,500 ரூபாய் மட்டுமே மாற்றித்தர முடியும்; ஒருவரே திரும்பத்திரும்ப வங்கிக்கு வருதைத் தடுக்க விரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு புதுப்புது சட்டங்களை தினமும் கொண்டு வந்து மக்களை இன்னும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கி வருகிறது. வங்கிகளில் நெரிசலும் குறைந்தபாடில்லை. அன்றாடச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை எடுப்பதற்குள் மக்கள் சின்னாபின்னமாகிவிடுகின்றனர்.

ஆனால் கோடீஸ்வரர்களின் ரூ.7,016 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்ய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கடனை வாங்கிய சுமார் 63 கோடீஸ்வரர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளதாம்.

விஜய் மல்லையா பெற்றுள்ள ரூ.1,201 கோடி கடன் தொகை உட்பட சுமார் ரூ.7,016 கோடியை தள்ளுபடி செய்ய உள்ளார்களாம்.

இவர்களில் 63 கோடீஸ்வரர்களின் கடன்தொகை முழுமையாகவும், 31 பேரின் கடன் தொகையில் பாதியும் தள்ளுபடி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அடுத்ததாக கேஎஸ் ஆயில் (ரூ.596 கோடி), சூர்யா பார்மாசூடிகல்ஸ் (ரூ.526 கோடி மட்டுமே), ஜிஇடி பவர் (ரூ.400 கோடிகள்தான்) மற்றும் சாய் இன்போ சிஸ்டம் (ரூ.376 கோடிகளே) அடங்கும்.

ஆனால், இந்த செய்தியில் உண்மையில்லை என்றும், ஒரு தொழில்நுட்ப வார்த்தையை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குளறுபடிதான் இந்த புரளிக்குக் காரணம் என்றும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காமல், நாட்டை விட்டு தப்பியோடிய ‘தொழிலதிபர்’ விஜய் மல்லையா பெற்றுள்ள ரூ.1,201 கோடி கடன் தொகை உட்பட ‘வேண்டுமென்றே’ கடனை திரும்ப செலுத்தாத 63 கோடீஸ்வர கடன்காரர்களின் கடன் தொகையை சேகரிப்பு கணக்கின் கீழ் (Advance Under Collection Account) முன்னெடுத்துச் செல்ல எஸ்.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம், தங்களது வங்கியின் பேலன்ஸ் ஷீட்டை சரி செய்ய எஸ்பிஐ இந்த திட்டத்தை மேற்கொள்ள உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top