ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற சென்ற மேலும் 5 பேர் உயிரிழப்பு

201611170916499904_more-5-death-rs-500-1000-currency-changed_secvpf

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சுரேஷ் சோனார் (வயது 40) நேற்று தன் மகள் திருமண நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவர் தன்னிடம் இருந்த செல்லாத நோட்டுகளை நேற்று முன்தினம் நீண்டநேரம் வரிசையில் நின்று வங்கியில் இருந்து மாற்றி எடுத்து வந்தார். இதில் உடல் சோர்வு அடைந்த அவர் இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வங்கியில் பணம் மாற்றுவதற்காக வரிசையில் காத்திருந்த 70 வயது முதியவர் ஒருவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் ராமச்சந்திர பஸ்வான் (70) ஓய்வூதியத்தை பெறவும், தன்னிடம் இருந்த செல்லாத நோட்டுகளை மாற்றவும் நேற்று அதிகாலை வங்கியில் நீண்ட வரிசையில் நின்றார். மூத்த குடிமக்களுக்கு தனியாக வரிசை இல்லாததால் பிற்பகல் 3 மணி வரை நின்ற அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதே இடத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, சித்தூர் மாவட்டத்தில் பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் நின்ற விஜயலட்சுமி (72), ரத்னா (70) ஆகியோர் மாரடைப்பால் இறந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top