சட்டசபையில் மேஜையை தட்டுவதற்கு இன்னொருவர் தேவையா?: திருநாவுக்கரசர் பேச்சு

 

201611161648167177_another-need-for-tapping-table-assembly-thirunavukkarasu_secvpf

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் , பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது நடக்கும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் சட்டசபையில் மேஜையை தட்ட கூடுதலாக ஒருவர் செல்வார். அதே நேரத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் தொகுதிக்காக குரல் கொடுப்பார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகமானால் நாம் எதை செய்தாலும் மக்கள் நமக்கு விசுவாசமாக ஓட்டு போடுவார்கள் என்ற மமதை அவர்களுக்கு ஏற்படும். அ.தி.மு.க. ஆட்சி இன்று படுத்துக்கொண்டே நடக்கிறது.

கடந்த 2 மாதமாக மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதா முதலில் கைநாட்டு வைத்தார். இப்போது கையெழுத்து போடுகிறார் என்கின்றனர். அதற்கும் மேலாக தொலைபேசியில் துக்கம் விசாரித்தார் என்கின்றனர்.

இதெல்லாம் உண்மையில் நடந்திருந்தால் மகிழ்ச்சியே. இந்த அரசின் தலைமை செயலாளரோ, நிதி அமைச்சரோ, சுகாதாரத்துறை அமைச்சரோ? கடந்த 2 மாதத்தில் முதல்வரின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் மருத்துவமனை கேட் வரை மட்டும் செல்லும் பலர் அவர் அப்படி இருக்கிறார், இப்படி இருக்கிறார் என்று பேட்டி கொடுக்கின்றனர்.

இப்போது வங்கிக்கு சென்றால் கைவிரலில் மை வைக்கின்றார்களாம். தேர்தலில் மை வைத்து பார்த்திருக்கிறோம். நம் பணத்தை எடுக்க சென்றால் நம் விரலிலேயே மை வைப்பதா? அசந்தால் நம் முதுகில் ரப்பர் ஸ்டாம்ப் கூட குத்தி விடுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top