ஜேஎன்யூ மாணவர் மாயம்: தகவல் அளிப்போருக்கு வெகுமதி ரூ.5 லட்சமாக உயர்வு

201611161629220170_delhi-police-increase-reward-amount-for-jnu-student-case_secvpf

டெல்லியில் உள்ள பிரபல ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த நஜீப் அகமது என்னும் மாணவரை கடந்த மாதம் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் காணவில்லை.

இதையடுத்து, காணாமல்போன நஜீப் அகமதுவை கண்டுப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாயமான மாணவரை போலீஸ் சிறப்புக்குழு அமைத்து தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று டெல்லி போலீசுக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் காணாமல் போன மாணவர் நஜீப் அகமதுவை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.

நஜீப் அகமதுவை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என டெல்லி போலீஸ் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அந்த வெகுமதியை தற்போது 5 லட்சமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top