ரூ.6 ஆயிரம் கோடியை ஒப்படைத்தேனா?: குஜராத் வைர வியாபாரி மறுப்பு

201611160834225809_gujarat-diamond-dealer-refuses-handing-over-of-rs-6-crore_secvpf

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால் ஆங்காங்கே கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் குப்பை தொட்டியிலும், பைகளிலும் செல்லாத பணத்தை வீசி எறிந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியும், தொழில் அதிபருமான லால்ஜிபாய் படேல் கருப்பு பணமாக பதுக்கி வைத்து இருந்த ரூ.6 ஆயிரம் கோடியை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் அவருக்கு தொழில் அதிபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை அறிந்த உள்ளூர் செய்தியாளர்கள் லால்ஜிபாய் படேலிடம் விசாரித்தனர். இது குறித்து அவர் கூறுகையில், அந்த செய்தியில் துளி அளவும் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி. நான் உள்ளூரில் விற்பனை செய்யும் சாதாரண வியாபாரி கிடையாது. வைர வியாபாரம் செய்து வருகிறேன். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறேன். என்னுடைய தொழிலில் எந்த ஒளிவு மறைவும் கிடையாது என்றார்.

இதே லால்ஜிபாய் தான் சில மாதங்களுக்கு முன்பு மோடியின் உடையை ரூ.4.3 கோடிக்கு ஏலம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top