தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

201611150901134801_will-moderation-rains-in-tamil-nadu-today_secvpf

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே தமிழக கடல்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது கன்னியாகுமரி கடல்பகுதியில் நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

தமிழகத்தில் அதிக பட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 12 செ.மீட்டரும், தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியில் 4 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.

திருச்செந்தூர், நீலகிரி மாவட்டம் கே.பிரிட்ஜ், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், கும்பகோணம், மதுக்கூர், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, குடவாசல் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், நன்னிலம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஆடுதுறை, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்களம், திருச்சி மாவட்டம் புல்லம்பாடி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, சிவகங்கை மாவட்டம் இளையங்குடி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், விருதுநகர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top