எது கருப்பு பணம்? ரூ500க்கு 300 கொடுக்கும் அவலம் !(வீடியோ இணைப்பு)

கடந்த 8 ஆம் தேதி இரவு பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இது பொது மக்களிடையேயும் சிறு குறு வணிகர்களிடையேயும் எப்படி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிந்து கொள்ள கடந்த ஒன்பதாம் தேதி காலை கோயம்பேடு வணிக வளாகத்திற்கு சென்றிருந்தோம்.

15050307_1369922983052910_790530633_n

நாள் முழுவதும் மிகவும் பரப்பாக இருக்கும் சந்தை அன்று மிகவும் வெறிச்சோடிக்கிடந்தது. இரவு ஒரு மணிக்கு வணிகத்தை துவக்கும் கோயம்பேடு வணிக வளாகம் அதன் முந்தைய தினம் திடீரென அரசு அறித்த அறிவிப்பால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. சில மொத்த வணிகர்கள் சில்ல ரை வணிகர்களுக்கு பொருட்கள் கொடுக்க தயாராக இருந்த போதும், வாடிக்கையாளர்களிடம் 500 ரூபாய் தாள்களே அதிகம் இருந்ததால் சில்லரை வணிகர்கள், கூறு போட்டு விற்பவர்கள் அன்று வியாபாரம் இல்லாமல் இருந்தனர்.

சந்தைக்கு காய்கரி வாங்க வந்த நடுத்தர வயது பெண் ஒருவரிடம் பேச்சு கொடுத்த போது, காலையில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை மாற்ற வழியில்லாமல் இருப்பதாகவும் எந்த பொருளும் வாங்க முடியாமல் அப்படியே திரும்பி செல்கிறேன் என்றும் கூறினார்.

மார்க்கெட்டுக்கு ஆட்டோவில் வர வேண்டும் என்றால் கூட முடியவில்லை. கையில் இருக்கும் ஒன்றிரண்டு 100 ரூபாயை ஆட்டோவிற்கு கொடுத்துவிட்டு செலவிற்கு என்ன செய்வது என்று சிந்திக்க வேண்டியுள்ளதாகவும், மருத்துவமனையில் வாங்கப்படுவதாக சொன்னாலும் அவர்களும் வாங்குவதில்லை என்றனர் சிலர்.

15049828_1369922986386243_1121977558_n

குறிப்பாக சில்லரை மற்றும் மொத்த வணிகர்களின் வணிகம், பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள், பூ, வாழை இலை, கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவை கிராமங்களில் இருந்து அருகில் உள்ள மொத்த சந்தைக்கு வரும். அங்குள்ள கமிசன் மண்டிகளில் அவை கொள்முதல் வணிகர்களால் ஏலம் எடுக்கப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதி செய்து அடுத்த நாள் காலை கோயம்பேட்டில் இறக்கு   வார்கள். அங்கு கொள்முதல் வணிகர்களிடம் இருந்து மொத்த வணிகர்கள் வாங்கி சில்லைரை வணிகர்கள் மூலம் பொருட்கள் வாடிக்கையாளர்களை வந்தடையும். இது தான் தமிழகத்தில் உள்ள பல சந்தைகளின் வணிகச் சங்கிலி.

15050091_1369922959719579_768864663_n

எட்டாம் தேதி அன்று நடந்த வணிகத்திற்கான பணம் வெளியூரில் இருந்து கொண்டுவரப்பட்ட சரக்குகளுக்கு லாரிகளில் கொடுத்து அனுப்பியுள்ளனர். அது மறுநாள் காலையில் அந்த ஊர்களில் உள்ள மொத்த வணிகர்களால் பெற்று கொள்ள முடியாத சூழலில் அவர்களால் விவசாயிகளுக்கு பணம் ஒப்படைக்க முடியவில்லை. இப்படி ஒரு பெரும் வணிகச் சங்கிலி அறுபட்டு நிற்பதால் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டுவருவதில் இருந்து வீட்டுத்தேவைக்கு காய்கறி வாங்குவது வரை அனைத்தும் பாதிக்கப்படுள்ளது. அழுகும் பொருட்களான காய், கனி விவசாயிகளும் வியாபாரிகளும் மிக பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளனர்.

கையில் சில்லரை இல்லாத மக்கள் ஏ.டி.எம் களை தேடி ஓடிக்கொண்டிருந்த போது சேட்டுகள் என சொல்லப்படுகிற குஜராத் மார்வாடிகள் சென்னையின் பல பகுதிகளில், குறிப்பாக சில்லரை மற்றும் மொத்த வணிகம் நடக்க கூடிய சந்தை பகுதிகளில் 500 ரூபாய் தாள்களை வாங்கி கொண்டு 400, 300ரூபாய் என கொடுத்துள்ளனர். அன்றாடம் வணிகம் செய்யும் சாதாரண மக்கள் கையில் இருக்கும் பணம் செல்லாது என்றவுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு 500 ரூபாய்க்கு 200 ரூபாய் கமிசன் கொடுத்து மாற்றியுள்ளனர். இதனை கடந்த 9ஆம் தேதி அதிகாலை கோயம்பேடு வணிகவளாகத்தில் சில்லரை வணிகம் செய்யும் சிறு வணிகர்கள் தெரிவித்தனர். (விடியோ இணைக்கப்படுள்ளது)

நாடு முழுக்க செல்லாது என்று அறிவித்து, கையில் இருக்கும் ஒன்று, இரண்டு நோட்டுகளை மாற்ற மக்கள் அலை மோதிக்கொண்டிருக்கும் போது, இந்த சேட்டுகளால் எப்படி இத்தனை 500, 1000 ரூபாய்களை வாங்க முடிகிறது என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். உண்மையான கருப்பு பணம் இப்பொழுது உருவாகிக் கொண்டிருக்கிறது. அன்றாட கூலி, சிறு வணிகர்களிடம் இருந்து வாங்கப்படும் கமிசன் பணம்தான் உண்மையான கருப்புபணம். உலகில் தம் மக்களையே ஏமாற்றிய ஒரு பிரதமர் இருந்தார் என்று வரலாறு நாளை சொன்னால் அது பிரதமர் மோடியாகதான் இருக்க முடியும்!

 

 

 

 

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top