தொலைக்காட்சிகள் உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க தேவையில்லை: வெங்கையா நாயுடு தகவல்

தலைநகர் புதுடெல்லியில்  நடைபெற்ற பொருளாதார நிபுணர்கள் மாநாடு-2016 இல் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது வெங்கையா நாயுடு பேசியதாவது:-

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை

இந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டதல்ல, நீண்ட நாட்களாக தயார் செய்து பின்னர் எடுக்கப்பட்டதாகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த நடவடிக்கையை சிலரை தவிர அனைவரும் பாராட்டியுள்ளனர்.

கருப்பு பணத்தை தவிர பேருந்துகள், ரயில்கள் என அனைத்து இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. எதும் பெரிதாக முடங்கி போகவில்லை.

தொலைக்காட்சி சேனல்கள் தங்களது உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க தேவையில்லை. மாநில தகவல் தொடர்பு துறை மந்திரிகள் மாநாடு வருகின்ற டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top