தென்கிழக்கு வங்ககடலில் மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு

உத்தரபிரதேச மாநிலம், ஷகிபாபாத் மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தொழிற்சாலைக்குள் இருந்து தீயானது கொளுந்துவிட்டு எரிந்தது.

காலை 5.20 மணியளவில்  இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி அபுல் அப்பாஸ் ஹூசைன் தெரிவித்தார். தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

வடகிழக்கு பருவமழை தாமதமாக கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை பெய்தது. இந்த நிலையில் வங்ககடலில் 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.

அது புயலாக மாறி மியான்மர் சென்று திரும்பிய நிலையில் ஒடிசா பக்கம் திசை மாறிச் சென்றது. மற்றொரு காற்றழுத்தமும் இதே போல் திசை மாறியதால் தமிழகத்தில் மழை குறைந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்தது. வெப்பச்சலனம் காரணமாக நெல்லை, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்தது.

நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சாத்தான்குளத்தில் அதிகபட்சம் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

இன்றும் நாளையும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமானுக்கு தெற்கே மேலடுக்கு காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் படிப்படியாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே போல் அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே உருவான மேலடுக்கு சுழற்சி தற்போது மாலத்தீவு வரை பரவியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழை மேலும் தீவிரம் அடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top