கருப்பு பணத்தை மீட்கும் இந்த முயற்சி தவறானது: அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தலைவர் பேட்டி

கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்புகளின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-

639

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் மட்டும் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. 1946, 1976-களில் இதேபோல கருப்பு பணத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்தது.

1976-ல்ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. ஆனாலும் அந்த முயற்சி பயன் அளிக்கவில்லை. கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை.

 கருப்பு பணத்தை தடுக்க முடியும். அதற்கு இந்த  வழி  தீர்வாகாது. கருப்பு பணம் என்பது கரண்சி மட்டுமல்ல. தங்க கட்டிகளாகவும், சொத்துக்களாகவும், வெளிநாடுகளில் பணம் டெபாசிட் வைத்திருப்பதும் கருப்பு பணம்தான். இவற்றையெல்லாம் எப்படி கண்டுபிடித்து ஒழிக்க முடியும் என மத்திய அரசுக்கு தெரியும். ஆனால் அதனை முறையாக செய்வது இல்லை.

வங்கிகள் மூலம் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க முயற்சி எடுக்கிறது. இது தவறான முடிவு. 1976-ல் இதுபோன்று நடவடிக்கை எடுத்தார்கள். அப்படியானால் எப்படி மீண்டும் இவ்வளவு கருப்பு பணம் வந்தது?

எனவே கருப்பு பணத்தையும், கள்ளநோட்டு புழக்கத்தையும் அடியோடு தடுக்க வேண்டும் என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயர் அளவிற்கு அறிவித்து விட்டு செயல்படுத்தக் கூடாது.

கருப்பு பணம் மூலம் தீவிரவாத செயல் பெருகுவதாக கூறுவதும் தவறு. வங்கிகளில் கள்ளநோட்டு வருகிறது. அதனை எங்களால் தடுக்க முடியவில்ல. கருப்பு பணம் பூதாகரமாக பெருகிவிட்டது. அதனை கடுமையான சட்ட நடவடிக்கையின் மூலம்தான் ஒழிக்க முடியும்.

இவ்வாறு இவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top