அமெரிக்க அதிபர் தேர்தல் முன்னிலை நிலவரம்: ஹிலாரி கிளிண்டன் – 133, டொனால்டு டிரம்ப் – 167

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

us-election-2016-good-night-for-trump-puts-clinton-under_secvpf

தொடக்கத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இருதரப்பினரும் மாறி மாறி முன்னிலை பெற்றனர்.

ஆனால் சில மணி நேரங்களில் நிலைமை முற்றிலும் மாறியது. பல்வேறு மாகாணங்களில் டிரம்ப் தொடர்ச்சியாக முன்னிலை பெற்று வருகிறார்.

மொத்தம் 50 மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 9.30 மணி  நிலவரப்படி டிரம்ப், ஹிலாரி முறையே 167, 133 வாக்குகளில் முன்னிலையில் உள்ளனர்.

மொத்தமுள்ள 538 தொகுதிகளில் 270-ல் வெற்றி பெறுபவர்கள் தான் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்கள். அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலியால் அமெரிக்க மற்றும் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top