சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்துக்கு ராகுல் காந்தி தலைமை

உடல்நலக்குறைவால் சோனியா காந்தி பாதிக்கப்பட்டதால் இன்று நடைபெற்று வரும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்துக்கு அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்தார். காங்கிரஸ் உயர் மட்ட தலைவர்கள் பங்கு பெற்ற இந்த வகை கூட்டத்திற்கு ராகுல் காந்தி தலைமை தாங்குவது இதுதான் முறையாகும்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான மன்மோகன் சிங், ப சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஜனார்தன் திரிவேதி, அகமது படேல், அம்பிகா சோனி, ஏகே அந்தோணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடருக்கு முன் இந்த நடைபெறும் இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நவம்பர் 16 ஆம் தேதி துவங்கும் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில்  பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த  காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதே போன்று கட்சியின் அமைப்பு தேர்தல்களும் மேலும் ஓராண்டுக்கு மேல் தள்ளிப்போவது குறித்தும் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top