ரெயில் கட்டணம் உயர்கிறது: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்

017-18ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை பிப்ரவரி 1-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

budget-increase-train-fares_secvpf

அப்போது மத்திய பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டையும் ஒருங்கிணைத்து தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரெயில் பட்ஜெட்டில் பயணிகளுக்கான ரெயில் கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் ரெயில் கட்டண உயர்வு மறைமுகமாக இருந்தது. ஆனால் இந்த தடவை பயணிகள் கட்டண உயர்வு நேரடியாக இருக்கும் என்று ரெயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த தடவை பிரிமீயம் முறையில் கட்டண உயர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தால் ரெயில்வேக்கு வருமானம் அதிகரிக்கவில்லை எனவே நேரடி கட்டண உயர்வுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தடவை சரக்கு கட்டண உயர்வு அதிகமாக இருக்காது என்றும் தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சரக்கு கட்டணம் வெகுவாக குறைந்து விட்டது. எனவே சரக்கு கட்டணத்தை உயர்த்தினால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரெயில்வேயின் பல்வேறு திட்டங்களுக்கு ஏராளமான நிதி தேவைப்படுகிறது. முக்கிய நகரங்களை இணைக்கும் திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடி செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய காரணங்களால் பயணிகள் ரெயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று கூறப்படுகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top