விஜயகாந்த் பற்றி விமர்சிக்கவில்லை: பிரேமலதாவுக்கு வைகோ பதில்

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை தாக்கி பதில் அளித்தார்.

அவர் கூறுகையில், ‘தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேருவதற்கு வைகோதான் வந்தார். ஆனால் இப்போது அவர் எங்களை விமர்சனம் செய்கிறார். அவர் மிகுந்த உணர்ச்சி வசப்படுபவர். தினமும் ஒரு கருத்தை சொல்வார்’ என்றார்.

பிரேமலதாவின் இந்த கருத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார். இன்று காலை அவர் கலிங்கப்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது பேட்டியை முழுமையாக கேட்காமல் மேலோட்டமாக கேட்டு பிரேமலதா பதில் அளித்துள்ளார். முழுமையாக கேட்டால் நான் எந்த அர்த்தத்தில் பேட்டி அளித்தேன் என்பது விளங்கும். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் பதில் அளித்தேன்.

அப்போது மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பாக முதலில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாது என்றே அறிவித்திருந்தோம். இந்த சூழ்நிலையில் விஜயகாந்தை கூட்டணியில் சேர்க்க பல வழிகளை தி.மு.க.வினர் கையாண்டு வந்தார்கள். ஆனால் விஜயகாந்த் அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு எங்களுடன் கூட்டு சேர்ந்தார்.

இதனால் எங்கள் கூட்டணி சார்பாக அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம் என்று கூறினேன். இந்த பேட்டியை முழுவதுமாக கேட்டால் நான் எந்த சூழ்நிலையில் அவ்வாறு கூறினேன் என்பது தெரியவரும்.

நான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை ஒரு போதும் விமர்சிக்கவில்லை. அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. எனது பேட்டியை தவறுதலாக புரிந்து கொண்டதால் இந்த விளக்கம் அளித்துள்ளேன்.

டெல்லியில் தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இரு நாட்டு மந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள். இது போல பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு விளைவும் ஏற்படவில்லை.

தமிழக மீனவர்களை இந்திய பிரஜையாக கருதி பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top