நீதிமன்றத்தில் சரணடைந்த போராட்டகுழு.- எஸ்கேப் ஆன நீதிபதி.

கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சி மணல் குவாரியில் சட்டத்துக்கு புறம்பாக  மணல் கொள்ளை  நடந்து 3000 கோடி ரூபாய் இழப்பு  ஏற்பட்டுள்ளது  இதனை தடுக்காத  எங்களை கைது செய்து நீதிமன்ற காவலில்  வைக்க கோரி  காவேரி பாதுகாப்பு இயக்கத்தினர்  நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர் அவர்களை  எதிர் கொள்ள முடியாத நீதிபதி, ”உங்கள் மீது குற்றபதிவு ஏதும்  இல்லை எனவே உங்களை  கைது செய்யமுடியாது” என நீதிமன்ற பணியாளர் மூலம் போராட்ட குழுவினருக்கு  கடிதம் கொடுத்துள்ளார். போராட்டகுழுவினர் கேட்ட எந்த கேள்விக்கும் நீதிபதி   பதிலளிக்கவில்லை.

mug

நீதி மன்றத்தில்   நடந்தவை பற்றி  போராட்டகுழுவை சேர்ந்த  முகிலன் அவர்கள்  வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில் மதியம் 01.30 மணிக்கு நீதிபதி ரேவதி எங்களை அழைத்தார். அவர் எங்களிடம் “உங்கள் சரண்டர் மனுவை வைத்து உங்களை கைது செய்ய முடியாது” என்றார்.

நான் அவரிடம்

“கடந்த நான்கு மாதத்தில் மட்டும் வேலாயுதம்பாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட “தோட்டக்குறிச்சி ஊருக்கு 600 மீட்டர் தூரம் கிழக்கு பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம்- கிழக்கு தவுட்டுப்பாளையம் வழியாக நஞ்சை கடம்பன்குறிச்சி மணல்குவாரியின் மேற்கு பகுதி வரை சுமார் நான்கு (04) கிலோ மீட்டர் தூரம் வரை நீளத்திலும், காவிரி ஆற்றில் அகலத்தில் இரண்டு கிலோ மீட்டர் முழுவதும், சுமார் 20 அடி ஆழம் வரை” ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து 15க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை வைத்து மணல் கொள்ளை அனைத்து இடங்களிலும் நடந்தும், கடம்பன்குறிச்சி மணல் குவாரியில் முறைகேடாகவும் மணல் கொள்ளை நடந்து அரசு சொத்தும் –மக்கள் சொத்தும் , சந்தை மதிப்பில் சுமார் 3000 கோடி மணல் கொள்ளை நடைபெற்று உள்ளது. அதை நாங்கள் தடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்து வருகிறோம். எனவே இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்து உள்ளோம். எனவே எங்களை கைது செய்யுங்கள் உடனே”

என்றேன்.

உடனே குற்றவியல் நடுவர் அவர்கள் “மாவட்ட கலெக்டர் இடம் புகார் கொடுக்கலாம் தானே” என்றார். நான் அவரிடம்” மாவட்ட ஆட்சியரிடம் சுமார் எட்டு முறை

மனு மட்டும் அல்லாமல் பல்வேறு வீடியோ ஆதாரமும் கொடுத்துள்ளோம்.

காவல்துறை, பொதுப்பணித்துறை என அனைவருக்கும் இந்த மூன்று மாதத்தில் பலமுறை மனு கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை எவ்விதமான சிறு நடவடிக்கையும் கூட இல்லை.

மக்களிடம் வாக்கு பெற்ற அரசு, மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெரும் அதிகாரிகள் என எவரும் மணல் கொள்ளைக்கு எதிராக சிறு நடவடிக்கை எடுக்க கூட தயார் இல்லை. அது மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பொறுப்பு முதல்வராக உள்ள ஓ.பி.எஸ் உறவினர்கள் என்று சொல்லி மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் வீடு புகுந்து போராட்டக்குழு பொறுப்பாளர்களை மிரட்டுகின்றனர். இது பற்றி மாவட்ட செயல்துறை நடுவரான மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

மனுக்கள் கொடுத்தால் ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விதி. ஆனால், மாவட்ட கலெக்டரிடம் 3 மாதத்திற்கு முன்பு கொடுத்த மனுவிற்கு கூட இன்று வரை பதில் எதுவும் இல்லை.

மொத்தத்தில் மணல்கொள்ளையை தடுப்பவர்களாக யாரும் இல்லை. நாங்களும் வெறுமனே இதைப் பார்த்துக் கொண்டு குற்ற செயலுக்கு உடந்தையாக உள்ளோம். எனவே எங்களை கைது செய்யுங்கள்” என்றேன்.

கரூர் குற்றவியல் நடுவர் “எங்களுக்கு நீங்கள் கொடுத்த சரண்டர் மனு அடிப்படையில் கைது செய்ய இயலாது” என்றார். நான் “அரசியல் சாசனம் 51 அ) பிரிவு (எ)- -ன்படி இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பொதுமக்களின் அடிப்படை கடமையாக சொல்லியுள்ள “ஆறுகள், இயற்கை சூழலை அழியாது காத்து வளர்த்தல்” என்ற கடமையை நிறைவேற்றாமல், மணல் கொள்ளையை தடுக்காமல் சந்தை மதிப்பில் சுமார் 3000 கோடி இழப்பு ஏற்பட காரணமாகியுள்ளோம். எங்களை இதற்காக கைது செய்ய முடியவில்லை எனில் எப்படி இந்த கொள்ளையை தடுக்கும் வழி என நீதிமன்றம் வழி காட்ட வேண்டும்” என்றோம். கரூர் குற்றவியல் நடுவர் இதற்கு பதில் எதுவும் பேசவில்லை.

நான் ”மாவட்ட நிர்வாகம், காவல்துறை , பொதுப்பணித்துறை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதுவும் மணல்கொள்ளையை தடுக்க உதவவில்லை. நீதிமன்றமும் இதற்கு உதவ முடியவில்லை எனில் நாங்கள் என்ன செய்வது, மணல்கொள்ளையை தடுக்க” எனக் கேட்டேன். இதற்கும் கரூர் குற்றவியல் நடுவர் பதில் எதுவும் பேசவில்லை. உங்கள் மனுப்படி உங்களை நான் கைது செய்ய முடியாது என்றே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தார்.

“நீதிமன்றம் 3000 கோடி இழப்பு ஏற்பட காரணமாகியுள்ள மணல்கொள்ளை பிரச்சினை இதில் பாராமுகமாக இருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால், மணல்கொள்ளையை எதிர்த்துப் போராடும்

எங்களைப் போன்றோர் மணல்கொள்ளையர்களால்

எந்த நேரத்திலும் கொலை செய்யப்படலாம் என்பதை

இந்த நீதிமனறத்தில் பதிவு செய்கின்றோம்” என்றோம்.

உடனே நீங்கள் சிறிது வெளியே இருங்கள் என்று நீதிமன்ற பணியாளர் கூறினார். டி .எஸ்.பி கும்பராஜா அவர்கள் எங்களை நீதிமன்றத்தில் இருந்து வெளிக் கொண்டு வந்தார்.

பின்பு சிறிது நேரத்தில் கரூர் நீதிமன்ற பணியாளர் ஒரு லெட்ஜரை கொண்டு வந்து “மனுதாரர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டதாக மனுவில் குறிப்பிடவில்லை…. எனவே, மனுதாரர்கள் சரண்டர் மனு ஏற்றுக் கொள்ள முடியாது” என்று நீதிமன்றம் கூறி மனுக்களை நிராகரித்துள்ளது என்று உத்தரவிட்ட காப்பியை கையெழுத்து போட்டு பெற்றுக் கொள்ள சொன்னார். நீதிபதி எங்களை நேரடியாக எதிர்கொள்ளாமல் இவ்வாறு தப்பித்துக் கொள்ளும் அணுகுமுறையாகவே இதை பார்க்கிறேன். என்று குறிப்பிட்டிருந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top