மதுரையில் தென் மண்டல ஐ, ஜி அலுவகம் முற்றுகை 600 பேர் கைது

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் சாதி ஆணவ படுகொலைகளை தடுக்கத் தவறிய தமிழக காவல் துறையை கண்டித்து இன்று மதுரையில் உள்ள தென் மண்டல ஐ.ஜி அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

14915366_1458139560867659_6255830087409725353_n

14915685_1458139594200989_8639691926589362504_n

14947912_1458139477534334_2886845285126971181_n

14956422_1458139520867663_7059477567382271426_n

1

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,” தொடர்ச்சியாக தமிழகத்தில் , குறிப்பாக தென் தமிழகத்தில் சாதி ஆணவப்படுகொலைகள் அதிகரித்து இருக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசின் அலட்சிய போக்குதான் காரணம்” என குற்றம் சாட்டினர்.

நெல்லையில் திண்டுக்கல் சிவகுருநாதன், பெண் காவலர் ராமு, திண்டுக்கல்லில் பாண்டிச்செல்வி, தேனியில் தங்கபாண்டியன்  என  குறுகிய காலத்தில் நடந்த இந்த  தொடர் படுகொலைகளுக்கு காவல் துறை  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக் காட்டினர்.

மேலும்  முற்றுகையின் போது, ” சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு காரணமான சாதி வெறி கொலையாளிளை கைது செய்! குற்றவாளிகளை தப்பவிடாதே! சாதிவெறிக்கு துனைப் போகாதே!

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்று!

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கு!

சாதி ஆணவப் படுகொலைகளுக்கு சிபிஐ விசாரணை நடத்து!  என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு தொடர்ச்சியாக  தலித் மக்களுக்கு  எதிராக  செயல் படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றசாட்டினை முன்வைத்தனர்

 

14914660_1361142440597631_1656016835_n df

இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், SDPI கட்சி,  மனித நேய மக்கள் கட்சி, ஆதி தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் விடியல் கட்சி, ஆதி தமிழர் பேரவை, தமிழ் புலிகள் அமைப்பு, ,தமிழர் விடியல் கட்சி ,மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top