மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதியில் உறைந்துள்ள இத்தாலி மக்கள்

இத்தாலி நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய நிலையில், மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இத்தாலியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டதால் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், இன்று மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நில நடுக்கம் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் மையப்பகுதியில் உள்ள நோர்சியா என்ற நகருக்கு அருகே இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் ஒன்றரை கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து எந்த வித செய்திகளும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top