காணாமல் போன மலேசிய விமானம் வேண்டுமென்றே மூழ்கடிக்கப்பட்டதா?:

காணாமல் போன MH370 மலேசிய விமானத்தின் சிக்னல்கள் வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டு, கடலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

 
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு சென்ற MH370 விமானம் 239 பயணிகளுடன் திடீரென காணாமல் போனது. இந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறந்துவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. இதனிடையே விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

கான்பெரேரா நகரில் கூடிய இந்த குழு இந்த விமானம் காணாமல் போன போது செயற்கை கோளுடன் அதன் சிக்னல் நிலையாக இருந்ததாகவும், எனினும் திடீரென துண்டிக்கப்பட்டு விமானத்தின் பாதை திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் தெரிவித்துள்ளது.

ஒரு லட்சம் கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப்பணி வரும் ஜனவரி மாதம் நிறைவுபெறும் பொழுது தேடும் பணி அத்துடன் நிறைவு பெறும் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் மற்றும் விமான பாகங்களை மறு ஆய்வு செய்ய 3 நாள் கூட்டம் ஆஸ்திடேலியாவின் கான்பெரா நகரில் நடைபெற உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top