கடந்த முப்பத்தாறு வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பூகம்பம் ஒன்று தாக்கியதை அடுத்து அவசர நடவடிக்கைகளை இத்தாலி மேற்கொள்கிறது.
நாடெங்கிலும் இது உணரப்பட்ட போதிலும், இதனால் எவரும் இறந்ததாக தகவல் இல்லை. ஏற்கனவே ஆட்டங்கண்டிருந்த மத்திய அம்பிரியா நகர் முன்னைய பூகம்பங்களால் ஆட்களை வெளியேற்றியிருந்தது. ஆனால், இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்ததால் அவர்களுக்கு உதவி தேவைப்படுகின்றது.