சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின்  நடிப்பில் உருவாகியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம்  நவம்பர் 11-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

aem

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்பு-கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் எல்லாம் முன்னரே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . படம் எப்போது வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், நவம்பர் 11-ந் தேதி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top