தமிழகத்தில் பலத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

201610311413456891_meteorological-department-information-heavy-rain-in-tn_secvpf

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக உடுமலைபேட்டையில் 12 செ.மீ மழை பெய்துள்ளது.

தமிழகத்தின் மேற்கு மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதியில் காற்று மண்டலத்தில் ஒரு மேல் அடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது.

அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் ஏதாவது ஒரு பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்:-

உடுமலை, வாடிப்பட்டி தலா 12 செ.மீ., பொள்ளாச்சி-11செ.மீ., பேச்சிப்பாறை-10 செ.மீ., திருமங்கலம்- 8 செ.மீ., திருப்பத்தூர்-7 செ.மீ., திருப்பூர், செந்துரை, மணியாச்சி, அவினாசி, காரைக்குடி தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top