ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பாகிஸ்தானை 3-2 என வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது

201610301953100704_asian-champions-trophy-hockey-india-beats-pakistan_secvpf

மலேசியாவில் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

தொடக்கம் முதலே இருநாட்டு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடினார்கள். ஆனால் முதல் காலிறுதி நேரமான 15 நிமிடங்களில் இரண்டு அணி வீரர்களாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை. 2-வது 15 நிமிடத்தில் இந்தியா சிறப்பாக விளையாடியது. இந்த 15 நிமிடத்தில் இந்தியா இரண்டு கோல்கள் அடித்தது. பாகிஸ்தான் ஒரு கோல் அடித்தது. இதனால் முதல் பாதி பாதி நேர ஆட்டமான 30 நிமிடத்தில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றது.

3-வது காலிறுதி நேரத்தில் பாகிஸ்தான் வீரர் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது. அதன்பின் 4-வது மற்றும் கடைசி காலிறுதி ஆட்டத்தில் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது. இதனால் இந்தியா 3-2 என முன்னிலைப் பெற்றது. கடைசி 9 நிமிடங்களில் பாகிஸ்தான் கோல் அடிக்க இந்திய வீரர்கள் அனுமதிக்காததால், இந்தியா 3-2 என பாகிஸ்தான் வீழ்த்தி ஆசிய சாம்பின்ஸ் டிராபி கோப்பை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2வது  முறையாக  ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி கோப்பையை கைப்பற்றியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top