பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சி போராட்டத்தில் கலவரம்: தடியடி-கண்ணீர் புகை வீச்சு

201610301159020866_riots-in-struggle-of-imran-khan-party-after-police-tear-gas_secvpf

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் கம்பெனி மற்றும் சொத்து வாங்கியிருப்பதாக பினாமா பேப்பர் செய்தி வெளியிட்டது. எனவே, நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி வருகிற நவம்பர் 2-ந் தேதி இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்ரான்கான் கட்சி அலுவலகத்தில் புகுந்து நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் தொண்டர்களையும் வேட்டையாடி வருகின்றனர்.

தொண்டர்கள் வருகையை தடுக்க ரோடுகளில் கப்பலில் ஏற்றப்படும் கண்டெய்னர்களை வைத்து அடைத்து வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் இம்ரான்கான் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் கற்களை வீசி தாக்கினார்கள். அதை தொடர்ந்து கலவரம் மூண்டது.

எனவே கலவரத்தை அடக்க கட்சி தொண்டர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top