செல்லிடப்பேசிகளில் இந்திய மொழிகளின் பயன்பாடு கட்டாயம்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் செல்லிடப்பேசிகளில் நாட்டின் பிராந்திய மொழிகளின் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய தர நிர்ணயச் சட்டத்தின் 10(1)-ஆவது பிரிவு அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து செல்லிடப்பேசிகளிலும் ஹிந்தி உள்பட அனைத்து பிராந்திய மொழிகளின் பயன்பாடும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையானது அடுத்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவரப்படும்.
இதன்படி, செல்லிடப்பேசிகளில் வேற்று மொழிகளில் உள்ள வாசகங்களை இந்தியாவின் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கவும், தகவல்களை பதிவு செய்யவும் முடியும்.
ஆங்கில மொழி தெரியாதவர்களுக்கும் தகவல் தொழில்நுட்பத்தின் அனைத்து பயன்களும் சென்று சேர வேண்டும் என்பதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top