‘கியான்ட்’ புயல் வலு இழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது தமிழகத்தின் வட மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ‘கியான்ட்’ புயல் வலு இழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. என்றாலும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான ‘கியான்ட்’ புயல் நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. அந்த புயல் மேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென்று அந்த புயல் வலு இழந்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:–

வங்க கடலில் உருவான ‘கியான்ட்’ புயல் வலு இழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி விசாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கில் 280 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேற்கு திசை நோக்கி நகர்ந்து மேலும் வலு இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்றாலும் வெள்ளிக்கிழமை (இன்று) வட தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். தீபாவளி தினமான சனிக்கிழமை (நாளை) வட மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வடகிழக்கு பருவமழை வருகிற 30–ந் தேதி தொடங்க வாய்ப்பு இருக்கிறது.  இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.

ராவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வலு இழந்து தமிழ்நாட்டை நோக்கி திரும்பி இருப்பதால் இன்று முதல் திங்கட்கிழமை வரை தமிழகத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை நகரில் நாளையும், ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை, கோவை உள்ளிட்ட உள் மாவட்டங்களில் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் மழை பெய்யும் என்றும், திங்கட்கிழமை சில இடங்களில் 5 முதல் 10 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பேச்சிப்பாறையில் 8 செ.மீ., சிவகிரியில் 4 செ.மீ., ஆயிக்குடியில் 3 செ.மீ., சாத்தான்குளத்தில் 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top