கனடா: யாஜிதி அகதிகளை ஏற்க முடிவு

இராக்கின் சிஞ்சார் நகரில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கொடூரங்களுக்கு உள்ளான யாஜிதி இனத்தவரை நான்கு மாதங்களுக்குள் கனடாவில் குடியமர்த்த அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், யாஜிதி இனத்தவருக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் இழைந்த கொடுமைகளை “இனப் படுகொலை’யாக அறிவித்தும் அந்த நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நான்கு மாதங்களில் விமானம் மூலம் எத்தனை யாஜிதி அகதிகளை கனடாவுக்கு அழைத்து வர முடியும் என்பதைக் கணக்கிட்டு, அதனடிப்படையில் அகதிகள் குடிமர்த்தப்படுவார்கள் என்று அரசு தெரிவித்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top