டி காக் அதிரடி சதத்தால் ஒரே நாளில் 415 ரன்கள் குவித்தது தென்ஆப்பிரிக்கா

201610221843131021_de-kock-smashes-ton-against-pink-ball_secvpf

தென்ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நவம்பர் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை பெர்த்திலும், 2-வது போட்டி நவம்பர் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஹோபர்ட்டிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை அடிலெய்டிலும் நடைபெறுகிறது.

அடிலெய்டில் நடைபெற இருக்கும் 3-வது டெஸ்ட் போட்டி பிங்க் பந்தில் நடைபெறும் பகல் – இரவு போட்டியாக நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் தென்ஆப்பிரிக்கா அணி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் இரண்டு நாட்கள் கொண்ட பகல் இரவு பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் இன்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் குக் மற்றும் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். எல்கர் 43 ரன்கள் எடுத்தும், குக் 5 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த ரசவ் 8 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

4-வது வீரராக களம் இறங்கிய அம்லா 51 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு அவுட் மூலம் வெளியேறினார். அடுத்து வந்த டுமினி 97 ரன்னில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். டு பிளிசிஸ் (8), பவுமா (11) சொற்ப ரன்களில் ஏமாற்ற, அடுத்து வந்த விக்கெட் கீப்பர் குயிண்டான் டி காக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 122 ரன்னில் ரிட்டையர்டு அவுட் மூலம் வெளியேறினார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா 89.5 ஓவரில் 415 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

நாளை கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி பேட்டிங் செய்யும். பிங்க் பந்து பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தென்ஆப்பிரிக்கா முழு தன்னம்பிக்கையுடன் பகல்- இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top