ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? தத்து

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அதன் தலைவர் எச்.எல்.தத்து தெரிவித்துள்ளார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிறுவன நாள் விழா தில்லியில் இன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்று எச்.எல்.தத்து பேசுகையில், 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் 20 தமிழர்கள், ஆந்திர போலீஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டதாகத் தெரிவித்த அவர், இந்த உத்தரவுக்கு அம்மாநில அரசு நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்துக் கருத்துத் தெரிவித்தவர்களை, கைது செய்திருப்பது தவறான செயல் என்றும்
இந்தியாவில் அனைவருக்கும் கருத்துரிமை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதல்வரின் உடல்நலம் தொடர்பாக வதந்தி பரவாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும் எச்.எல்.தத்து கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top