செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகியவை கூட்டாக இணைந்து புதிய விண்கலத்தை அந்த கிரகத்துக்கு அனுப்பி வைத்தன. அதற்கான விண்கலம் 14 ந்தேதி அனுப்பபட்டது.அக்டோபர் 19-ம் தேதி அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். பின்னர் செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து அந்த கிரகத்தை ஆய்வு செய்யும். அதேநேரம் ஜியாபரேலி என்ற வட்டவடிவிலான ஆய்வு கலம் ‘டிஜிஓ’ இயந்திர மனிதன் விண்கலத்தில் இருந்து பிரிந்து செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும். இந்த முயற்சி வெற்றி பெற்றால் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஞ்ஞானிகள், செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பிய இயந்திர மனிதன் தரையிறங்கியது குறித்து உறுதிப்படுத்த இயலாத நிலையில் உள்ளனர்.
செவ்வாயின் காற்று மண்டலத்தில் இறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தரையைத் தொடுவதற்கு சிறிது நேரம் முன்பாக, தகவல் தொடர்பிலிருந்து அது காணாமற்போனதாகத் தெரிவிக்கப்பட்டது.
அமைப்பின் மூத்த விஞ்ஞானி அது நல்ல அறிகுறி அல்ல என்று கருத்துரைத்தார். இருப்பினும் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது என கூறி உள்ளார்.
இதற்கு முன் ரஷிய விண்கலம் ஒன்று 20 நொடிகள் மட்டுமே இவ்வாறு இறங்குகையில் தாக்குபிடித்தது; மேலும் ஐரோப்பிய ஒன்றிய விண்கல முகமையின் விண்கலம் ஒன்று, தரை இறக்கப்பட்டது எனினும் அது செயல்படவில்லை.
இந்த சோதனை முயற்சி மெல்லிய கணிக்க முடியாக செவ்வாய் வளிமண்டலத்தின் மூலமாக, தனது கீழ் இறங்கும் வேகத்தை ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20,000 கிமீ வேகத்திலிருந்து பூஜ்ஜியத்திற்கு குறைக்க வேண்டும்.
ஜியாபரேலி அதன் பேட்டரிகள் தீர்ந்து போவதற்கு முன்னர் அங்கு நான்கு நாட்கள் தங்கி வானிலை தகவல்களை சேகரித்து வழங்கும்.
அடுத்த நான்கு வருடங்களில், செவ்வாய் கிரகத்தில் மனித உயிர்கள் வாழ்வதற்கான தடயங்கள் இருக்கிறதா என்பதை அறிய ரோவர் ஒன்றை அனுப்பும் ஐரோப்பிய விண்கலத்தின் முகமையின் பெரிய முயற்சிக்கு இது ஒரு சோதனை முயற்சியாக பார்க்கப்படுகிறது.
2003 ஆம் ஆண்டு பீகள் 2 என்னும் விண்கல சோதனை, கிறித்துமஸ் தினத்தன்று தரையிறக்கப்பட்டது ஆனால் உடனடியாக அது பழுதாகி போனதால் அதிலிருந்து எந்த ஒரு சமிக்ஞையும் வரவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது
.