என்.எல்.சி தலைமையகம் முற்றுகை; ஆற்றுப்பாசன விவசாயிகள் 200 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்ககோரியும், என்.எல்.சி.,யில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தைக் கர்நாடக மாநிலத்துக்கு வழங்கக்கூடாது என வலியுறுத்தியும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்கத்தினர் என்.எல்.சி இந்தியா நிறுவன தலைமையகத்தை முற்றுகையிட முயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெய்வேலி ஆர்ச் கேட் அருகே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், அங்கிருந்து மாநில தலைவர் கூ.விஸ்வநாதன் தலைமையில் பேரணியாக என்.எல்.சி இந்தியா தலைமையகத்தை

நோக்கி வந்தனர். செக் போஸ்ட் அருகே வந்த இவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர், காவல் துறையினரை கண்டித்தும், சாலையில் படுத்தும் கோஷங்களை எழுப்பினர். கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெய்வேலி வட்டம் 8-ல் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top