ஏபிவிபி அமைப்பினரின் தொடர் தொல்லையால் ஜேஎன்யு வளாகத்தில் மாணவர்கள் திடீர் தர்ணா!

தில்லி ஜேஎன்யு பல்கலைகழகத்தில் ஏபிவிபி அமைப்பினரின் தொடர் தொல்லையால் அமைதி குலையும் போக்கு ஏற்பட்டிருக்கிறது

தில்லி ஜேஎன்யு பல்கலைகழக வளாகத்தில் நேற்று நள்ளிரவில் மாணவர் அமைப்பினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏபிவிபி அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படும் துணைவேந்தரை 15 மணி நேரம் அலுவலகத்திலேயே சிறை பிடித்தனர்.பல்கலைக் கழக பதிவாளர் சர்க்கரை நோய் உள்ளவர் என்பதால் அவரை மட்டும் வெளியே அனுப்பினர் மற்றும் ஏபிவிபி அமைப்பினருக்கு ஆதரவாக செயல்பட்ட மற்ற அலுவலர்களையும் பல்கலைக் கழக வளாகத்திலேயே சிறைபிடித்து வைத்திருந்தனர்

jnu-protest_tarique-anwar_firstpost_dsc_0423

ஜேஎன்யுவில் எம்.எஸ்சி உயிரிதொழில்நுட்பம் படித்து வரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவர் நஜீப் அகமது, கடந்த சனிக்கிழமை திடீரென மாயமானார். இதையடுத்து காணாமல் போன நஜீப் அகமதுவை கண்டு பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நேற்று இரவு திடீரென 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைகழக நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் திடீர் போராட்டத்தை அறிந்து ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு மாணவ அமைப்பினரும் குவியத் தொடங்கியதால் ஜேஎன்யு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதுகுறித்து, பல்கலைக்கழக மாணவர்கள் கூறுகையில், ‘’பல்கலைக்கழக விடுதியில் பல்வேறு அத்துமீறல்கள் நடக்கின்றன. மாணவர்கள் சிலர் மீது வன்முறை தாக்குதல் நடக்கின்றன. இதில் பாதிக்கப்பட்ட ஒருமாணவர் தான் நஜிப் அகமது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவர் நஜீப் அகமதுவை இரண்டு நாட்களுக்கு முன் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள்.இதை தட்டிகேட்க சென்ற மற்றொரு மாணவனையும் ஜேஎன்யு பல்கலைக்கழக நிர்வாக அலுவலர் முன்பு அடித்து இருக்கிறார்கள்.இதை தொடர்ந்து  நஜீப் அகமது காணமால் போயுள்ளார். இவர் தற்போது எங்குள்ளார் என தெரியவில்லை’’ என்றனர்.

முன்னதாக பல்கலைக்கழக விடுதி தேர்தல் தொடர்பாக நஜீப்புக்கும், ஏபிவிபி மாணவர் அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும், இச்சம்பவத்துக்கு பின்னர் நஜீப் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. நஜீப் மாயமான விவகாரத்தில், ஏபிவிபி அமைப்பினருக்கு தொடர்புள்ளதாக அப்பல்கலைக்கழக மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.பல்கலைக்கழக துணைவேந்தர் ஜகதிஸ் குமார்  ஏபிவிபி அமைப்பினருக்கு சாதகமாக செயல்படுவதாலும் பாதிக்கப்பட்ட மாணவர் நஜிப் அகமது மீது ஏபிவிபி சொல்கிறபடி  காவல்துறையில் புகார் கொடுத்ததாகவும் மாணவர்கள் புகார் சொல்கிறார்கள்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top