கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

2வது அணு உலையின் டர்பனில் நடக்கும் தொழில்நுட்ப ஆய்வு காரணமாகவே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் மீண்டும் மின் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ஏற்கனவே ஒரு முறை மின் உற்பத்தி தொடங்கி நிறுத்தப்பட்ட நிலையில், அக்டேபார் 14ம் தேதிதான் 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் இன்று மீண்டும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top