ஆற்றில் மூழ்கிய பாகனை காப்பாற்றிய பெண் யானை: வீடியோ

தாய்லாந்து நாட்டில் புகழ்பெற்ற யானைகளுக்கான சரணாலயம் உள்ளது. இங்கு ஹம்லா என்னும் ஐந்து வயதான பெண் யானை ஒன்றும் உள்ளது. அந்த யானைக்கு பயிற்சியாளராக டாரிக் தாம்சன் (42) என்பவர் உள்ளார். அந்த சரணாலயத்தை சுற்றி உள்ள ஆற்றில் டாரிக்  குளித்து கொண்டிருந்தார்.

e

அப்போது அவர் தண்ணீரில் மூழ்குவது போன்ற செய்கையை செய்ய கரையில் இருந்த ஹாம் யானை உடனே அவரை நோக்கி ஓடி தன் தும்பிக்கையால் அவரை மீட்டது. இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு இணையத்தில் விடப்பட்டுள்ளது.

இது குறித்து டாரிக் கூறுகையில், நான் அந்த யானையின் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளேன். அதே போல யானையும் என் மீது அன்பு வைத்திருக்கிறதா என பார்க்கவே நீரில் மூழ்குவது போல நடித்தேன். அது உடனே என்னை ஓடி வந்து காப்பாற்றியது என் மீது யானை வைத்துள்ள பாசத்தை காட்டுவதாக இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top