இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்த, ‘பிரிக்ஸ்’ கூட்டமைப் பின், எட்டாவது மாநாடு, கோவா மாநிலத்தின் பெனாலிம் பகுதியில் நேற்று துவங்கியது.

modi-sirisena

அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம் போன்ற நாட்டு தலைவர்களையும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று இரவு கோவா வந்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா  இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

முன்னதாக நேபால் பிரதமர் புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’ மற்றும் பூட்டான் தலைவரும் கோவா வந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top